If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

கட்டங்களை நிரப்பி 10 பெறுதல்

ரகு எவ்வாறு இரு எண்களை கூட்டுவதன் மூலம் 10 என்ற எண்ணை பெறலாம் எனக் காட்டுகிறார். அவர் எடுத்துக்காட்டாக 3 + ___ = 10 மற்றும் 6 + ___ = 10 -ஐ பயன்படுத்துகிறார்.

காணொலி எழுத்துப்படி

இந்த கோடிட்ட இடத்த நிரப்பறதனால, எப்படி 10அ, அடையலாம் அப்படிங்கறத பார்க்க போறோம். நாம இப்போ, 3 கூட்டல் வெற்றிடம் சமம் 10 அப்படின்னு எழுதிக்குவோம். 3 அப்படிங்கிற எண்ணோட, எந்த எண்ண கூட்டினால், நமக்கு 10 அப்படிங்கிற கிடை கிடைக்கும் ? காணொளய நிறுத்திட்டு, நாம கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாம். இங்க 10 கட்டங்கள் இருக்கு. அதுல 3 கத்திரி பூ வண்ண வட்டங்கள் இருக்குது. இப்ப இந்த கட்டங்கள நிரப்ப, இன்னும் எத்தனை வட்டங்கள் தேவை ? 1 2 3 4 5 6 7 நமக்கு இப்போ 7 வட்டங்கள் தேவை. அதனால, 3ஓட 7அ கூட்டினா, அது 10க்கு சமம். அடுத்து, இன்னொரு கணக்க செய்வோம். இப்போ, 6 கூட்டல் வெற்றிடம் சமம் 10. நமக்கு, 6ஓட எதை கூட்டினா 10 கிடைக்கும். நம்மகிட்ட. 1 2 3 4 5 6 வட்டங்கள் இருக்குது. நம்மகிட்ட 10 கட்டங்களும் இருக்குது. 10 கிடைக்கறதுக்கு, எத்தனை அதிகமான வட்டங்கள் தேவை ? நமக்கு 1 2 3 4 வட்டங்கள் தேவை. அப்போ 6 கூட்டல் 4 சமம் 10. இத, 4 கூட்டல் 6 சமம் 10ன்னும் சொல்லலாம்.