If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

கூட்டல் மற்றும் கழித்தலை தொடர்புபடுத்துதல்

சால் 2+3=5, 5-2=3, மற்றும் 5-3=2 ஆகிய எண்களுக்கு இடையேயான தொடர்பினை காட்டுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இன்று நாம் பந்துகளைக் கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குகளை போடலாம் நம்மிடம் இருப்பது 2 பச்சை மற்றும் 3 ஊதா நிற பந்துகள், இதை கூட்டுனால் மொத்தம் எத்தனை 5 நாம் இதை எண்ணலாம், 1, 2, 3, 4, 5 . இதை வேறு மாதிரியாக பார்த்தால் இங்கே உள்ள 5ல் துவங்கி 1, 2, 3, 4, 5 . அதில் 2ஐ கழித்தால், மீதமிருப்பது எத்தனை ? 2ஐ எடுப்போம் 1, 2 நம் கையில் இருப்பது 3 பந்துகள் இன்கே நமக்கு வேறு வடிவம் கிடைக்கிறது. 2 + 3 =5 . இந்த 5 ல் 2ஐ எடுத்து விட்டால் நம்மிடம் மீதமாக இருப்பது 3 5 - 2 = 3 அடுத்து இன்னோரு வகையில் நாம் 5 லிருந்து ஆரம்பித்து 3 ஐ எடுக்கும் போது கிடைப்பது 2 அதனை கழிப்போம். 1, 2, 3. நம்மிடம் மீதமிருப்பது 2 . 2 + 3 = 5 . இன்னோரு வகையில் 5 - 2 = 3 5 ல் மூன்றை கழித்தால் கிடைப்பது 2 இங்கே கணிதத்தை புரிந்து கோள்வது மிகவும் முக்கியம். நாம் இரண்டு எண்களை கூட்டினால், நமக்கு கிடைக்கும் விடையிலிருந்து ஒரு எண்ணைக் கழித்தால் நமக்கு மற்றொரு எண் கிடைத்து விடும். கூட்டல், கழித்தல் கணக்கிற்கு இதுதான் சரியான முன் மாதிரி