If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

தீர்வு காணப்பட்ட எடுத்துக்காட்டு: முக்கோணங்களை வகைப்படுத்துதல்

எடுத்துக்காட்டு கணக்குகளை தீர்ப்பதன் மூலம் முக்கோணங்களை அசமபக்க, இருசமபக்க, சமபக்க, குறுங்கோண, செங்கோண, அல்லது விரிகோண முக்கோணங்களாக வகைப்படுத்தலாம்.  சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இந்த காணொளியில முக்கோணங்கள விரி முக்கோணமா இல்ல விரி முக்கோணம் இல்லையா அப்படிங்குறத வகை படுத்த போறோம். முக்கோணத்துல ஒரு விரி கோணம் அல்லது 90 பாகைகளுக்கு மேல ஒரு கோணம் இருந்தா அது விரி முக்கோணம் ஞாபகம் இருக்கட்டும், பாகை அப்டிங்குறத ஆங்கிலத்துல டிகிரி அப்டினு குறிப்புடுவாங்க. சரி கணக்குக்கு வருவோம், இந்த முக்கோணம் கண்டிப்பா விரி முக்கோணம் இல்ல, ஏன்னா இதுல எந்த விரி கோணங்களுமே இல்லையே, இது ஒரு செங்கோணம் இதுல எல்ல கோணங்களும் 90 பாகைக்கு குறைஞ்ச கோணங்கள தா இருக்கு. அதனால இது ஒரு விரி முக்கோணம் இல்ல , இந்த முக்கோணத்த பாத்த உடனேயே அதுல உள்ள பாகைகள எல்லா 90 பாகைகளுக்கு குறைவா இருக்குறது நல்லாவே தெரியுது. அதனால இதுவும் விரி முக்கோணம் இல்ல, இங்க இருக்குற இந்த இரண்டு முக்கோணங்களும் கொஞ்சம் வித்யாசமா இருக்கு. கோணம் Jக்கு L ங்குறது 90 பாகைகளுக்கு மேல இருக்குற மாதிரி தெரியுது. இந்த முக்கோணம் சரியான அளவுல வரையப்பட்டது அப்படினு நாம எடுத்துக்கலாம். அப்புடின்னா இது ஒரு விரி முக்கோணம் கோணம்கோணம் BAC யும் 90 பாகைகளூக்கு மேல இருக்குது அப்புடினா இது ஒரு விரி முக்கோணம் அப்புடினா நம்மகிட்ட இருந்த 4 முக்கோணங்கள்ள 2 விரி முக்கோணங்கள்னு நாம கண்டு பிடிச்சாச்சி இதே மதிரி இன்னும் சில கேள்விகள்ல செஞ்சி பாக்கலாம். இப்போ முக்கோணம் PIG ஐ பத்தி பாக்கப் போறோம். முதல்ல இங்க கொடுக்கப்பட்டுருக்க குறிப்புகள்ள எதெல்ல பொருந்துதோ அதையெல்லா தேர்ந்தெடுத்துக்குவோ, முதல் குறிப்பு என்ன சொல்லுதுன்னா முக்கோணம் PIG ஒரு சம பக்கமுக்கோணம் இது தப்பு ஏன்னா சம பக்க முக்கோணம்னாலே வடிவத்தோட எல்லா பக்கங்களும் ஒரே நீளத்துள இருக்கணும் இது நமக்கு முன்னாடியே தெரிஞ்ச ஒன்னுதா இந்த முக்கோணத்துல ரெண்டு பக்கம் 7 அடியும் இன்னொரு பக்கம் 4 அடியும் இருக்கு. அதனால தா இத நா தறுனு சொன்னே இரண்டாவது குறிப்புல முக்கோணம் PIG ல இரண்டு கோணங்கள் ஒரே அளவு அப்டினு சொல்லுது இது சரிதா ஏன்னா முக்கோணம் PIG ல இரண்டு கோணங்கள் 74 பாகைகளுக்கு சமமா இருக்கு மூனாவது குறிப்பு என்ன சொல்லுதுனா முக்கோணம் PIG ல ஒரு விரி கோணம் இருக்கு அப்டிங்குறதுதா விரி கோணம்னாலே 90 பாகைகளுக்கு மேல உள்ள கோணம் அப்படினு அர்த்தம் இப்ப நாம பாத்துகிட்டு இருக்குற இந்த முக்கோணம் PIG ல எந்த கோணமுமே 90 பாகைகளுக்கு மேல இல்ல அதனால இது தவறான விடை நாலாவது குறிப்பு முக்கோணம் PIG ல மூனு சிறிய கோணங்கள் இருக்கு அப்டிங்குறதுதா இது சரியான விடைதா ஏன்னா எல்லா கோணங்களுளுமே 90 பாகைகளுக்கு குறைவாதா இருக்கு 5 வது குறிப்பு முக்கோணம் PIG ல ஒரு செங்கோணம் இருக்கு அப்டிங்குறதுதா ஆனா இதுல பாக்குறப்போ எந்த செங்கோணமுமே தெரியல இது தப்பான பதில் தா. இதே மாதிரி இன்னும் சில க ணக்குகள போட்டு பாக்கலாம். இது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நெனைக்குரே ஏன்னா, இது ஒரு விளையாட்டுதனமான கணக்கு முக்கோணங்கள சம முக்கோணம் அல்லது சம முக்கோணம் இல்ல அப்டினு சொல்றதுக்கு சம முக்கோணம் னா முக்கோணத்தோட எல்லா பக்கங்களும் ஒரே அளவா இருக்கணும், அப்டிங்குறது நமக்கு நல்லாவே தெரியும். இப்போ இது ஒரு சம முக்கோணமா ? இந்த முக்கோணத்துல எல்லா பக்கங்களுமே ஒரே நீள அளவு. அப்புடினா இது ஒரு சம பக்க முக்கோணம் இப்போ இது ஒரு சம முக்கோணமா ? நிச்சையமா இல்ல, ஏன்னா? எல்லா பக்கங்களும் ஒரே அளவுல இல்ல. இந்த இரண்டு பக்கங்கள் கூட ஒரே அளவுல இல்ல அப்படின்னா இது ஒரு சமனில் பக்க முக்கோணம் இந்த முக்கோணத்துல ரெண்டு பக்கங்கள் ஒரே அளவு நீளத்துல இருக்கு இருக்குஆனா மூனாவது பக்கம் வேற அளவா இருக்கு அதனால இது ஒரு சம பக்க முக்கோணம் இல்ல அப்படின்னா இது ஒரு இருசம பக்க முக்கோணம் இந்த முக்கோணத்துல எல்லா பக்கங்களுமே ஒரே நீள அளவு அப்படின்னா இது ஒரு சம பக்க முக்கோணம் சரி, நாம இப்போ விடைய கண்டு பிடிச்சாச்சி. மீண்டும் நாம வேற காணொளில சந்திக்கலாம்.