If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

10 அல்லது 100 ஐ கூட்டுதல்

சால் ஒரு எண்ணுடன் 1, 10, அல்லது 100 ஐ கூட்டுகிறார்.

காணொலி எழுத்துப்படி

சற்று பெரிய எண் கொண்ட கணக்குதான், ஆனால் மிகவும் எளிதானது. சரி, கணக்குக்கு போகலாம். கொடுக்கப்பட்டுள்ள எண் 235 . 2 நூறுகள், நூறின் இடத்தில் 2 . 3 பத்துகள் , 10ன் இடத்தில் 3. 5 ஒன்றுகள் , 1ன் இடத்தில் 5 . இவற்றை கட்டங்களாக வரைந்துள்ளோம். இங்கே 235 கட்டங்கள் உள்ளன. 100 கொண்ட கட்டங்கள் 2. 2 நூறுகள், 3 பத்துகள், 5 ஒன்றுகள். இதில் ஒரு பத்தை சேர்த்தால் என்ன ஆகும் ? பார்ப்போமா ? 10 என்பது ஒரு பத்து. நாம் ஒரு 10 ஐ சேர்க்கப் போகிறோம். இங்கே நாம் இன்னொரு 10 ஐ சேர்க்க வேண்டும். இன்னொரு 10 மேலும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. அதை வரைந்து கொள்வோம். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 . மேலும் ஒரு 10 ஐ நாம் சேர்த்துவிட்டோம். இப்போது என்ன கிடைத்துள்ளது ? 3 பத்துகள் இடத்தில் இப்போது மேலும் ஒரு 10 சேர்ந்துள்ளது. மொத்தம் 4 பத்துகள் . 5 ஒன்றுகள் அதில் எதுவும் சேரவில்லை, ஆகவே 5 ஒன்றுகள் தான். 2 நூறுகள், நாம் நூறுகள் எதையும் சேர்க்கவில்லை. 2 நூறுகள், 4 பத்துகள், 5 ஒன்றுகள் . இப்போது விடை என்ன ? 2 நூறுகள், 4 பத்துகள், 5 ஒன்றுகள் . இது மொத்தம் 245 . இப்போது இன்னொரு கணக்கை பார்ப்போம். 10 ற்கு பதிலாக 100 ஐ சேர்த்து பார்போம். இங்கு ஒரு 100 ஐ சேர்ப்போம். ஒரு நூறு, 0 பத்துகள், 0 ஒன்றுகள். ஒரு நூறை சேர்த்துவிட்டோம். ஒரு 100 ஐ சேர்த்துவிட்டால் விடை என்ன ? அதை இங்கே வரையலாம். 2 நூறுகளோடு ஒரு 100 ஐ கூட்டுகிறோம். இப்போது இங்கே, இருப்பது எத்தனை நூறுகள்? 1, 2, 3 . 3 நூறுகள் . அதோடு ஒரு நூறை சேர்த்தால் மொத்தம், 300. பத்துக்களின் எண்ணிகை மாறுமா ? மாறவே மாறாது. ஏனெனில் நாம் பத்துக்களை கூட்டவில்லை. அதே 3 பத்துகள் தான் . ஒன்றுகளிலும் மாற்றமில்லை. அதே 5 ஒன்றுகள் தான். எனவே விடை 335 . 3 நூறுகள், 3 பத்துகள், 5 ஒன்றுகள் . இந்த கணக்கும் எளிதாகத் தானே இருக்கிறது.