If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: அடிப்படைக் கணிதம் > Unit 5

Lesson 5: 100 -க்குள் கூட்டுதல் மற்றும் கழித்தலுக்கான யுக்திகள்

பத்து குழு அமைத்தல் மூலம் 53 + 17 ஐ கூட்டுதல்

சால் எண்களை தனியாக பிரித்து மேலும் அதனை பத்துகளாக குழு அமைப்பதன் மூலம் 53 + 17 ஐ கூட்டுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இங்கே நாம் பார்க்கப்போவது கூட்டல் கணக்கு தான். ஐம்பத்து மூன்று கூட்டல் பதினேழினை .. புதிய முறையில் ஐம்பத்தி மூன்றுடன் பதினேழை எப்படிக் கூட்டுவது என்று பார்ப்போம். முதலில் 53 ஐப் பிரித்து அந்த எண்களை மாற்றி அடுக்குவோம் இப்படிச் செய்தால் எளிதாக இருக்கும். ஐம்பத்து மூன்றை முன்னர் பார்த்தது போலவே பத்துகளாகவும் ஒன்றுகளாகவும் பிரித்துக் கொள்வோம். 53ஐப் பத்துகளாகவும் ஒன்றுகளாகவும் பிரிப்போம் ஐந்து பத்துகள் ஐம்பது. அதனுடன் கூட்டல் மூன்று இது ஐம்பத்து மூன்று என்பது சரிதானே...? இதை அடைப்புக்குறிக்குள் இடுவோம் இது அதன் தொடக்கம் இங்கு முடிகிறது. அடைப்புக் குறி போடுவதற்குக் காரணம் இதைத் தான் முதலில் கணக்கிட வேண்டும் 53 என்பதும் 50 + 3 என்பதும் ஒன்று தானே. அதனுடன் 17ஐக் கூட்டப் போகிறோம். நான் 50 + 3ஐ முதலில் கூட்டலாம் பிறகு 17ஐச் சேர்க்கலாம் கூட்டலின் மொத்தத் தொகையைக் காண இன்னொரு விதமாகவும் செய்யலாம். அதாவது இப்படி மாற்றி எழுதலாம் 50 + 3 + 17 50 + 3 + 17 மூன்றுடன் பதினேழைக் கூட்டுவது என்றால் ஐம்பது கூட்டல் மூன்று இங்கே அடைப்புக் குறிக்குள் உள்ளது. 3 + 17ஐ முதலில் கணக்கிடுகிறோம் கூட்டல் கணக்கில் இரண்டும் ஒன்றுதான் வரிசையை மாற்றினாலும், விடை மாறாது இங்கே முதலில் ஐம்பதுடன் மூன்றைக் கூட்டுவோம். பிறகு மூன்றுடன் பதினேழைக் கூட்டுவோம். இதன் விடை என்ன? இங்கே 50 உள்ளது இங்கே 50 உள்ளது. இதனுடன் இங்குள்ள மூன்று கூட்டல் பதினேழு மூன்று கூட்டல் ஏழு பத்து மூன்று கூட்டல் பதினேழு இருபது. ஆக, 50 + 20 விடை என்ன? 5 பத்துகள் + 2 பத்துகள் விடை, 7 பத்துகள், அல்லது 70 இதே போல நாம் இங்கே இன்னொரு கணக்கைப் போடுவோம் இதுவும் முன்னர் போட்ட கணக்கைப் போன்றது தான். 41 + 9ஐ எப்படிக் கணக்கிடுவது? 41 + 9ஐ எப்படிக் கணக்கிடுவது? 41ஐப் பிரித்துக் கொள்வோம் 41 என்பது 40 + என்ன? 41 = 40 + 1 அதனுடன் 9ஐக் கூட்டவேண்டும் இங்கே +9 உள்ளது கூட்டும் வரிசையை மாற்றுவோம் (40 + 1) + 9 (40 + 1) + 9 என்பதும், 40 + (1 + 9) என்பதும் சமம் 1 + 9ஐ முதலில் கணக்கிடப் போகிறோம் ஒன்றுடன் ஒன்பதைக் கூட்டினால் கிடைக்கும் விடை என்ன? ஒன்று கூட்டல் ஒன்பது சமம் பத்து ஒன்று கூட்டல் ஒன்பது இங்கே அடைப்புக் குறிக்குள் இருந்தது. இப்போது அடைப்புக் குறிக்கு வெளியே 10 ஆகிறது 40 கூட்டல் 10 என்பது என்ன? 4 பத்துகள் + 1 பத்துகள் = 5 பத்துகள் இல்லையா..? அப்படியானால் விடை 50