If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

சம குழுக்களை கொண்டு பெருக்கல்

சால் பெருக்கலை காட்சிப்படுத்துவதற்காக அணிகள் மற்றும் தொடர் கூட்டல் முறையை பயன்படுத்துகிறார்.  சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

என்னிடம் 3 நட்சத்திரங்கள் உள்ளன இதோ, நட்சத்திரங்கள்! இப்போது ஒரு கணக்கை போட்டு பார்ப்போம் என்னிடம் 1 குழுவில் 3 நட்சத்திரங்கள் இருந்தால் என்னிடம் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன? என்னிடம் உள்ளது, 1 குழு, 3 நட்சத்திரங்கள் ஆக, மொத்தம் 3 நட்சத்திரங்கள்தான் 1 2 3 இதுதான் என்னுடைய 1 குழு, 3 நட்சத்திரங்கள் இப்போது, அடுத்த சுவாரஸ்யமான கேள்வி என்னிடம் 2 குழுக்கள் உள்ளன 3 நட்சத்திரங்களைக் கொண்ட 2 குழுக்கள் இது ஒரு குழு இது இரண்டாவது குழு 2 குழுக்கள், தலா 3 நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் வரும்? 2 குழுக்கள், ஒவ்வொன்றிலும் 3 2 குழுக்கள், தலா 3 இன்னொருவிதமாக யோசித்தால் 3 + 3 என்னிடம் 6 நட்சத்திரங்கள் உள்ளன ஆக, 1 x 3, 1 குழு 3 என்பது 3 2 குழு 3, அதாவது இரண்டு 3கள் என்பது 6 இதை இன்னும் சுவாரஸ்யமாக்குவோம் இப்போது 3 குழுக்கள், ஒவ்வொன்றிலும் 3 இதற்கு என்ன விடை? 3 குழுக்கள், ஒவ்வொன்றிலும் 3 இதை நான் 3 x 3 என்று எழுதலாம் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? 3 + 3 + 3 மொத்தம் 3 + 3 + 3 நட்சத்திரங்கள் மூன்று 3கள் 3 + 3 + 3 = 9 இதை எண்ணலாம் 1 2 3 4 5 6 7 8 9 நீங்கள் மூன்று மூன்றாகவும் எண்ணலாம் 3 6 9 இப்போது, இது உங்களுக்குப் புரிந்திருக்கும் இதை மேலும் அதிகமாக்குவோம் 4 குழுக்கள், ஒவ்வொன்றிலும் 3 நட்சத்திரங்கள் அதாவது, 4 x 3 இதைப்பற்றிச் இப்பொழுதுசிந்திப்போம் 1 2 3 4 இங்கே உள்ளது 4 குழுக்களாக 3 இதை நாம் 4 x 3 என்று எழுதலாம் அதாவது, 3 + 3 + 3 + 3 இங்கே நான்கு 3கள் உள்ளதைக் கவனியுங்கள் ஒரு 3, இரண்டு 3, மூன்று 3, நான்காவது 3 ஆக, நம்மிடம் உள்ளவை, 3, 6, 9, 12 மொத்தம் 12 நட்சத்திரங்கள் இப்போது, உங்களுக்கு ஒரு வேலை காணொலி நிறைவடையப்போகிறது நீங்கள் கணக்கை தொடருங்கள் 5 x 3 என்ன என்று கண்டறியுங்கள் அப்புறம், 6 x 3 அப்புறம், 7 x 3 அப்புறம் 8 x 3 9 x 3 பிறகு 10 x 3 உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் நீங்கள் நட்சத்திரங்களை வரையவேண்டியதில்லை வரைந்தால் கற்பனை செய்ய சுலபம் 4 x 3 என்பது உண்மையில் நான்கு 3கள் என நாம் பார்த்தோம் அப்போது, 5 x 3 என்பது ஐந்து 3கள் 1 2 3 4 5 ஐந்து 3கள் அதாவது, 3 6 9 12 15 மொத்தம் 15 இதைப்பற்றி யோசியுங்கள் இது எப்படி வந்தது என்று நீங்களே கண்டுபிடியுங்கள்!