If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: வகுப்பு 5 கணிதம் (இந்தியா) > Unit 4

Lesson 1: Fraction comparisons and equivalent fractions

சமான பின்னங்கள் காட்சியுடன்

சால் சமான பின்னங்களை காட்டுவதற்கு எண்க்கோடுகளையும், பின்ன மாதிரிகளையும் பயன்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இந்த காணொளியை நிறுத்தி விட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் இருக்கும், சிவப்பு பின்னத்தின் அளவு என்ன என்று யோசித்து பாருங்கள். இந்த பின்னத்தை நாம், எண் கோட்டில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதல் வட்டத்தில், 1 2 3 4 5 என, 5 சமமான பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதி, சிவப்பு நிறம். எனவே நாம் 1 / 5 வட்டம், சிவப்பு நிறம் உள்ளது என்று கூறலாம். இந்த வட்டத்தில், 1 2 3 4 5 6 7 8 9 10 என, 10 சமமான பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் 2 பகுதி, சிவப்பு நிறம். எனவே நாம், 2/10 வட்டம் சிவப்பு நிறம் என்று கூறலாம். 3வது வட்டத்தில், 1 2 3 4 5 6 7 8 9 10 என, இதிலும், 10 சமமான பகுதிகள் உள்ளன. அவற்றில் 2 பகுதி சிவப்பு நிறம். எனவே சிவப்பு பகுதி, வட்டத்தில் 2/10ஐ குறிக்கிறது. இதனை நாம் எண் கோட்டில் வரைந்து கொள்வோமா ? சரி இங்கு வரையலாம். அதை நானே வரைகிறேன். இங்கு ஒரு பெரிய எண் கோட்டை வரைந்துள்ளோம். சுழியத்திற்கும், ஒன்றிற்கும் நடுவில் இருக்கும் பகுதியை எடுத்துகொள்ளலாம். அதை நாம், 5 சமமான பகுதிகளாக பிரித்து கொள்வோம். எனவே, 1 2 3 4 5 சமமான பகுதிகள் ஒன்றிக்கு சமம் ஆகும். இந்த பகுதி, 5இல், ஒரு பகுதி என்றால், 1/5 ஆகும். அது நம்மை இங்கு கொண்டுசெல்லும். எனவே இது 1/5 ஆகும். எனவே, இந்த எண்ணை நான், திரும்பவும் எழுதுகிறேன். அதை நான் இங்கு எழுதுகிறேன். மேலே உள்ள பகுதியை நான், 10 சமமான பகுதிகளாக பிரிக்கிறேன் 1 2 3 4 5 6 7 8 9 10 நாம் இதனை, 10 சமமான பகுதிகளாக பிரித்து விட்டோம். இதில் 2/10 எங்கே இருக்கிறது ? நான் 2 பகுதிகள் செல்கிறேன். 1 2 நான் மீண்டும் அதே புள்ளிக்கு வந்துள்ளேன். எனவே 1/5, 2/10இற்கு சமன் ஆகலாம். எனவே இந்த புள்ளி, 2/10ஐ குறிக்கிறது. அப்படி என்றால், அவை இரண்டும் ஒரே எண் அல்ல, அவை இரண்டும், எண் கோட்டில், ஒரே புள்ளியில் உள்ளன. எனவே நீங்கள் நினைப்பது சரிதான். 1/5 சமம் 2/10. இவை இரண்டும் ஒரே எண்ணைத்தான் குறிக்கின்றன. இந்த வட்டங்களை பார்த்தால், உங்களுக்கு தெளிவாக புரியும். இங்கு இருக்கும் பகுதிகளை இரண்டாக பிரித்தால், இந்த பின்னத்திற்கு சமமான பகுதியை பெறுகிறோம். அவை இரண்டும் ஒன்றாகி விட்டன. நான் எதற்கும் நிறம் அடிக்கவில்லை. நான் எந்த சிவப்பு நிறத்தையும் எடுத்து விடவில்லை. நான் பகுதிகளை இரண்டாக மட்டுமே பிரித்தேன். இங்கு பாருங்கள்., இதை நீங்கள் இரண்டால் பிரித்தால், வட்டத்தின் ஒரே பகுதியை பெறுவோம். எனவே இவை இரண்டும் எண் கோட்டில், ஒரே எண்ணைத்தான் குறிக்கின்றன.