If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:3:00

காணொலி எழுத்துப்படி

இலக்கங்களின் சிறப்புத் தன்மையை காண்போம். 0 லிருந்து 19 வரை எண்ணலாமா, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, இப்போது அடுத்து 2 இலக்கத்தை பார்ப்போம் . 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 . ஏனென்றால் இந்த எண்கள் 2 இலக்கங்களில் இருக்கின்றன . மேலும் இவை தனித் தன்மை வாய்ந்தவையும் கூட, இவ்வாறு கூறுவதற்கு காரணம், இந்த எண்கள் பதின்ம எண்களாகும் . இவை அனைத்திற்கும் முதல் இலக்கம் ஒன்றாகும் . அந்த ஒன்று 10ற்குறிய தகுதியுடன் இருக்கிறது. இந்த வரிசையில் இருக்கிற ஒவ்வொரு ஒன்றும் 10 ஐ குறிப்பதாகும் . அப்படியானால் என்ன பொருள், இந்த 10 ஐ எடுத்துக் கொள்வோம். இதில் இந்த1 பத்தைக் குறிக்கிறது. இதில் உள்ள 0 ஒன்றிற்கு பின்னால் உள்ள 0 ஐ குறிக்கிறது . 10 உடன் 0 கூட்டினாலும் . நமக்கு கிடைப்பது 10 தான் , எந்த எண்ணுடன் சுழியனைக் கூட்டினாலும், நமக்கு கிடைப்பது அதே எண் தான் , இப்போ மற்ற எண்களைப் பார்க்கலாம் . 2 இலக்கங்களை நாம வெவ்வேறு நிறத்தில் குறித்துக் கொள்வோம் . இதை சற்று முழுமையாக பார்ப்போம் . 10ற்கு அடுத்து இந்த 11ல் மஞ்சள் நிறத்தில் உள்ள ஒன்று 10ஐக் குறிக்கிறது. ஊதா நிறத்தில் உள்ள ஒன்று 10ற்கு பின்பும் ஒன்றைக் குறிக்கிறது . 12ல் மஞ்சள் நிற ஒன்று 10 யும் . ஊதா நிற இரண்டு 2யும் குறிக்கிறது. இதை இன்னொரு விதமாக சொல்வதென்றால், மஞ்சள் நிற ஒன்று ஒரு பத்தைக் குறிக்கிறது . இது 10 . இந்த 2 என்பது 2 ஒன்றுகள் . தொடர்ந்து இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம் . இந்த தொடர் முழுவதும் இது போலவே அமைந்துள்ளது. 13 என்பது 10 + 3 . 14 என்பது 10 + 4 15 என்பது 10 + 5 . காணொளியை நிறுத்திவிட்டு நீங்கள் தனியாக, 16, 17, 18, 19 வரை சொல்லிக் கொண்டே போகலாம் . 10 + வேறு ஒரு எண் என்று எழுதலாம் . இங்கு இருக்கும் ஒரு அமைப்பை புரிந்து கொள்ளுங்கள். முயற்சிப்போம். 16 ஐ இப்ப்டியும் எழுதலாம் . 10 + ? 16 என்பது 10 + 6 17 என்பது 10 + 7 18 என்பது 10 + 8 19 என்பது 10 + 9 இப்படி எழுதுவதன் மூலம் நமக்கு ஒன்று தெளிவாக புரிகிறது. ஒவ்வொரு எண்ணிலும் இந்த ஒன்று 10ஐ குறிக்கும் . வலது பக்கம் உள்ள அத்தனை எண்களும், ஒன்றுகளை குறிக்கிறது.