If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நீளம் அளவிடுதல்: தங்கச் சிலை

ஒத்த அளவு நீள அலகுகள் கொண்ட பொருட்களை இடைவெளி விடாமலும் ஒன்றின் மேல் ஒன்று விடாமலும் அளவிட பழகுவோம். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

வணக்கம் மகாராணி, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? வணக்கம் மந்திரியாரே! நான் என் அப்பாவின் உருவத்தை சிலையாக செய்து உள்ளேன்., ஆனால் அதன் சரியான உயரத்தை கணக்கிடுவதில், சந்தேகமாக இருக்கிறது? சரியான அளவு எது மகாராணி ? அரசன் ஆளுகிற நாட்டில், பாரம்பரிய வழக்கம் என்று ஒன்று உள்ளது. அது உங்களுக்கு தெரியும் இல்லையா ? அதாவது நீல நிற சதுரம் கொண்டு, பொருட்களை அளவிடுவது. ஆம் எனக்கு தெரியும். நான் இப்போது, சிலையை நேரில் பார்த்து, நீல நிறங்களின் அளவுகளை கொண்டு, சிலையின் உயரத்தை கணக்கிட விரும்புகிறேன். எனக்கு உதவுங்கள் மந்திரியாரே.. அப்படியே ஆகட்டும். நம் நாட்டின் சட்டப்படி, தங்க சிலைகள், நான்கு நீல நிற சதுரங்களின் உயரம் தான் இருக்கு வேண்டும். சரி அதனால் என்ன பிரச்சினை ? ஆனால் நான் உருவாக்கிய சிலை, நான்கு நீல நிற சதுரங்களின் உயரம் கொண்டு இருக்குமா என்பது தான் ஏன் சந்தேகம் ? கவலைப்பட வேண்டாம் மகாராணியாரே.! நாம் இதனை சோதித்து பார்க்கலாம். அப்படியா ? அது எப்படி மந்திரியாரே? என்னிடம் நான்கு நீல நிற சதுரங்கள் இருக்கிறது. அதனை சிலைக்கு அருகில் அடுக்கி, அளவை கண்டுபிடிப்போம், சரியா ? சரியான யோசனை மந்திரியாரே.. அதையும் நீங்களே செய்து பாருங்களேன். ஆம் அப்போதுதான், எனக்கு சரியான விடை கிடைக்கும். இப்பொது சதுரங்களை அடுக்குகிரேன்,. 1 2 3 இது என்ன? 3 நீல நிற சதுரங்களின் உயரம் தானே இருக்கிறது ? இப்போது என்ன செய்ய போகிறேன்? பொறுமை பொறுமை மகாராணி .. நீங்கள் அடுக்கும் போது, இடையே இடைவெளியை விட்டு விட்டிர்கள், அதனால் வந்த விடை, சரியாக இருக்காது. மீண்டும் சரியாக அடுக்கி, முயற்சி செய்யுங்கள். உம்.. இப்போது சரியாக அடுக்குகிரேன், கவனியுங்கம் மந்திரியாரே.. நான் இடைவெளி விடவில்லை. ஆம்.. மகாராணி ஆனால்.. இடையில் பேசாதிர்கள். 2 3 4 5 இதில் 5 நீல நிற பெட்டிகள் வருகிறதே? என்ன செய்வது மந்திரியாரே.. ? இந்த சிலையின் உயரம், 5 நீல நிற சதுரங்களா ? பதட்டம் வேண்டாம் மகாராணி இம்முறையும் தவறு செய்து உள்ளீர்கள் அப்படியா ? என்ன செய்துள்ளேன் ? கூறுங்கள்? நீங்கள் கணக்கிட தொடங்கும் பொழுது, சிலையின் அடி பாகத்தில் இருந்து தொடங்கவில்லை. அதற்கும் கீழ் இருந்தே தொடங்கி உள்ளீர்கள். அது தவறு. ஓ.. அப்படியா ? அப்போ இதை நீங்களே கணக்கிடுங்கள். இல்லை நீங்களே செய்யுங்கள். ஆனால் நான் சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். சிலையில் அடிபாகம், நேர் கோட்டில் இணையாக இருக்கு வேண்டும். மற்றும், சிலையின் மேல் பகுதியான தலை, நேர் கோட்டில் இணையாக இருக்கு வேண்டும். இடைவெளியும் விடாமல், ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும். உம்.. சரி இது தான் கடைசி முறை,. முயல்வதே முன்னேற்றம் மகாராணி. இதுதான் சிலையின் அடி பகுதி.. இது அதன் மேல் பகுதி. இப்பொழுது அடுக்க தொடங்குகிறேன், 1 2 இடைவெளியும் விடாமல் அடுக்குகிறேன். 3 4 சரியான கணிப்பு. இந்த சிலை, 4 நீல நிற சதுரங்களின் உயரமே உள்ளது. இந்த சிலை, அரண்மனையை மேலும், அழகுட்டப் போகிறது. நன்றி மந்திரியாரே.. மகிழ்ச்சி மகாராணி ..