If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பட்டை வரைபடங்கள் மூலம் படித்தல்: நாய் எலும்புகள்

சால் பட்டை வரைபடங்களை படித்து விளக்குகிறார்.

காணொலி எழுத்துப்படி

இங்கே சில மாணவர்கள், இரயில்ல இல்லைனா ஆகாய விமானத்துல, அப்படி இல்லனா , கப்பல் மூலமா, அவுங்களோட கோடை விடுமுறைய கொண்டாடுவதற்கு பயணப் பட்டடுருக்காங்க . இதோ இங்க இருக்குற செவ்வக வரைபடம் . எத்தனை மாணவர்கள் என்ன வகையான பயணத்த மேற்கொள்றாங்க என்பதை காட்டுது . நாம இத இப்போ பாக்கலாம் . 5 மாணவர்கள் இரயில் மூலம் பயணம் செய்ராங்க . 10 மாணவர்கள் விமானம் மூலம் பயணம் செய்றாங்க . 2 மாணவர்கள் கப்பல் மூலமா பயணம் செய்றாங்க . இப்போ என்ன கேள்வி கேட்க்கப் பட்டிருக்குனா, கப்பல்ல பயணம் செஞ்சவங்கள விட விமானத்துல பயணம் செஞ்சவங்க எத்தன பேர் அப்படிங்குறது தான் , சரி, 10 மாணவர்கள் விமானத்துலயும் 2 மாணவர்கள் கப்பல்லயும் பயணம் செஞ்சிருக்காங்க . அப்படின்னா , 2 ஐ விட 10 பெருசு . இப்போ 2 விட 10 ஆனது எவ்வளவு அதிகம்னு பாக்கப் போறோம் . 10 - 2 = ? 10 - 2 = 8 அப்போ கப்பல்ல பயணம் செஞ்சவங்கள விட , விமானத்துல 8 மாணவர்கள் கூடுதலா பயணம் செஞ்சிருக்காங்க, இத, இந்த விளக்க படத்துலயும் நாம பாக்கலாம் . இப்போ கப்பல்ல பயணம் செஞ்சவங்களோட எண்ணிக்கையான 2 லிருந்து, விமானத்துல பயணம் செஞ்சவங்களோட எண்ணிக்கையான 10ற்கு சென்றால் , அத நாமலே எண்ணலாம் இப்போ , 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ஆக கப்பல விட விமானத்துல 8 பேர் கூடுதலா பயணம் செஞ்ருக்காங்க , சரியான விடை . அடுத்ததா இன்னொரு கணக்க பாத்துடலாம் . சன்னி, ரோவர் மற்றும் பாஸ்டர் என்ற மூன்று நாய்கள் எலும்பு துண்டுகல அவுங்கலோட வீட்டின் பின் புறத்துல புதச்சி வெச்சிருக்கு. இந்த செவ்வக விளக்க படமானது , ஒவ்வொரு நாயும் எத்தனை எலும்புத் துண்டுகள புதைச்சி வெச்சிருக்கு என்பத காட்டுது . இப்போ இத கொஞ்சம் கவனிக்கலாம் . சன்னி 10 எலும்பு துண்டுகள புதச்சி வெச்சிருக்கு . ரோவர் 3 எலும்புத் துண்டுகள புதச்சி வெச்சிருக்கு பாஸ்டர் 7 எலும்பு துண்டுகள புதச்சி வெச்சிருக்கு இப்போ கேள்வி என்னன்னா ? ரோவர் சன்னிய விட எத்தன எலும்புத் துண்டுகள் குறைவா புதைச்சி வெச்சிருந்தது அப்படினு பாக்க போறோம் . ரோவன் 3 எலும்பு துண்டுகள புதைச்சிது, சன்னி 10 எலும்பு துண்டுகள புதைச்சி வச்சிருந்தது. அப்படின்ன 3 - 10 எவ்வளவு ? நமக்கு 10 - 3 = 7 என கிடைக்கும் . இல்லைன்னா, 10 - 7 = 3 கிடைக்கும் . அத இப்போ எண்ணலாமா ? 1, 2, 3, 4, 5, 6, 7, அப்படின்னா ரோவன், சன்னி விட 7 எலும்புத் துண்டுகள் குறைவா புதைச்சி இருந்தது . சரியான விடை , இப்போ இது போல இன்னொரு கணக்க செய்வோம் . இப்போ, நவம்பர் மாதத்தோட கால நில வெப்பமா, மேக மூட்டமா இல்ல மழையாவும் இருந்தது . இந்த செவ்வக வரைபடம் என்ன சொல்லுதுன்னா ? ஒவ்வொரு வகை காலனிலை , நாட்களின் எண்ணிக்கையை காட்டுது . சரி, நவம்பர்ல 18 வெப்பமான நாட்கள் இருக்குது . அதே நவம்பர் ல, 7 மேக மூட்டமான நாட்களும் இருக்குது . மறுபடியும் நவம்பர் ல 5 மழை நாட்களும் இருக்குது . இப்போ என்ன கேள்வி கேட்ருக்காங்கன்னா , நவம்பர்ல எத்தனை நாட்கள் மழையா இருந்துச்சி என்பதுதான் . இத நாம வரைபடத்த பார்த்து உடனே சொல்லிடலாம் . இப்போ மழை பெய்யக் கூடிய கால நிலைக்கான பகுதிய கொஞ்சம் பாக்கலாம் . மேலும் இந்த வரைபடத்துல படத்துல5 வரையிலான எண்ணிக்கைய அது காட்டுது . அப்படின்னா நவம்பர் ல 5 நாட்கள் மழை பெய்துருக்கு . விடைய சரி பாக்கலாமா ? சரியான விடைதா, நாம வேறொரு காணொளில மறுபடியும் சந்திக்கலாம்.