If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

சகோதரர் பாலின் வடிவ சேகரிப்புகள்

சால் வடிவங்களை பக்க எண்ணிக்கைகள், மூலைகளின் எண்ணிக்கைகள் மற்றும் பக்க-நீளங்களின் அடிப்படையில் வகைப்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

தம்பி பாலா. ஊரில் இருந்து வந்து விட்டாயா ? ஆம் அக்கா, என்ன செய்றிங்க ? அடுத்து என்ன வீடியோ செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறேன். அப்போ எனக்கு உதவுறிங்களா? வடிவங்களை பற்றி கற்று கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது. சரி பாலா, வடிவங்களில் உனக்கு என்ன சந்தேகம்? கேளு ? இதோ இந்த வடிவங்களை பாருங்களேன் ? இதை எப்படி வகைபடுத்துவது ? அதற்கு நிறைய வழிகள் உள்ளது பாலா. பக்கங்களை எண்ணுவது ஒரு வழி. அதாவது, ஒவ்வொரு வடிவங்களிலும், எத்தனை பக்கங்கள் உள்ளது என என்ன வேண்டும். அதை எப்படி சொல்றது? எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் அக்கா !! இந்த முதல் வடிவத்தில், இது ஒரு பக்கம். அதாவது, இரண்டு முனைகளுக்கு இடையே உள்ள கோட்டினை, பக்கம் என சொல்லுவோம். இப்போ எண்ணுவோமா? 1 பக்கம் 2 பக்கங்கள் 3 பக்கங்கள் 4 பக்கங்கள் அதாவது, 4 பக்கங்களை கொண்டது, இந்த வடிவம். இந்த முறை, கணக்கிட மிக எளிதாக இருக்கிறது. சரி, அடுத்த வடிவத்திற்கும், இதே முறை தான்.. எங்கே, நீயே கணக்கிடு பார்ப்போம். உம்.. சரி.. இந்த வடிவத்தில், 1 பக்கம், 2 பக்கங்கள் 3 பக்கங்கள் 4 பக்கங்கள் உள்ளது. மிக சரியாக எண்ணி விட்டாய் பாலா. இது என்ன, அடுத்த வடிவத்தில், முனைகளே தெரியவில்லை? ஆம், இந்த வடிவத்திற்கு.. முனைகள் கிடையாது. முனைகள் இல்லாததால், பக்கங்களும் கிடையாது. எனவே, பூஜியம் பக்கங்கள், பூஜியம் முனைகள். இதை நான் அழகாக எழுதுகிறோம். ஆம் அதுதான் எனக்கும் பிடிக்கும். சரி எல்ல வடிவங்களின் மேலேயும் இப்படியே எழுதுகிறேன். இப்பொது, நீதான் விடை solla போகிறாய்.. சரியா ? உம்.. சொல்கிறேனே.. இதோ, இந்த முதல் வடிவத்திற்கு சொல் ? இந்த வடிவத்திற்கு, 4 பக்கங்கள் இருக்கு. இரண்டு முனைகளை இணைக்கிற கோடு, பக்கம் என சொன்னிங்க.. இல்லையா ? 1 2 3 4 முனைகள். சரி அடுத்த வடிவத்திற்கு சொல் ? இதை நாம் முன்பே பார்த்து விட்டோம். எனவே, 4 பக்கங்கள், 4 முனைகள். அடுத்த பக்கத்திற்கு சொல்? ஆனால், கவனமாக சொல்ல வேண்டும். உம்... நினைவு இருக்கட்டும், இதற்கு பூஜியம் முனைகள். எனவே, பூஜியம் பக்கங்கள். உம்.. கவனமாகத்தான் இருக்கிறாய். அடுத்த வடிவத்திற்கும்., 4 பக்கங்கள், 4 முனைகள், எல்ல வடிவத்திற்கும், இப்படித்தான் இருக்குமா ? இல்லவே இல்லை பாலா.. எங்கே. கடைசியாக உள்ள வடிவத்தை கணக்கிடு ? இதில் 1 2 3... முனைகள், 1 2 3 பக்கங்கள். இப்போது தான் எனக்கு தெளிவானது., நன்றி அக்கா.. நான் புத்தகத்தில் படித்து இருக்கிறேன், வடிவங்களை வேறு விதத்திலும் வகைபடுத்தலாம் என்று, அதாவது, பக்கங்களின் நீளத்தை கணக்கிடுவது, இங்குள்ள எந்த வடிவம், ஒரே நீல அளவை கொண்ட, பக்கங்களை கொண்டது. சரி, பார்க்கலாம் அதை. இந்த சிவப்பு வடிவத்திற்கு, 4 பக்கங்கள் உள்ளன. ஆனால் இந்த பச்சை பக்கம், இந்த ஊதா பக்கத்தை விட, சிறியதா இருக்கு., எனவே இதனுடைய பக்கங்கள், வெவ்வேறானது. அடுத்த வடிவத்தை பார்த்தல், இந்த பக்கமும் இந்த பக்கமும் ஒரே அளவுடையது . அதே போல, இந்த பக்கமும், இந்த பக்கமும் அதே அளவுடையது. எனவே, இதற்கு 4 பக்கங்களும் சமம். சரியாக புரிந்து கொண்டாய். இதே போல தான் பச்சை நிற வடிவமும். இறுதியாக உள்ள வடிவத்தை பார்த்தால், இந்த பக்கமும் இந்த பக்கமும் இந்த பக்கமும் ஒரே அளவுடையது. எனவே, இதன் 3 பாகங்களும் சமம். அக்கா, எனக்கு இப்பொது தெளிவாக புரிந்துவிட்டது. மிக்க நன்றி அக்கா.. மகிழ்ச்சி பாலா..