முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 8
Lesson 2: வடிவங்களின் பண்புகள்பலகோணங்களின் மீளாய்வு
பலகோண உறுப்பு மற்றும் 8 பக்கங்கள் கொண்ட பலகோணத்தின் பெயர்களை மீளாய்வு செய்தல். பின் சில பயிற்சி கணக்குகளை முயற்சிக்க.
பலகோணம் என்றால் என்ன?
ஒரு பலகோணம் என்பது குறைந்தது 3 நேர்ப்பக்கங்களை கொண்ட மூடிய வடிவம்.
பயிற்சி தொகுப்பு 1
வடிவங்களை அடையாளம் காணுதல் பற்றி மேலும் கற்க வேண்டுமா? இந்த காணொலியினை பாருங்கள்.
பலகோணங்களை அடையாளம் காணுதல்
பலகோணங்கள் அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கையை கொண்டு பெயரிடப்படுகின்றன.
பக்கங்களின் எண்ணிக்கை | பெயர்கள் |
---|---|
3 | முக்கோணம் |
4 | நாற்கரம் |
5 | ஐங்கோணம் |
6 | அறு கோணம் |
7 | எழுகோணம் |
8 | எண்கோணம் |
பயிற்சி தொகுப்பு 2
இது போன்ற கணக்குகளை மேலும் பயிற்சி செய்ய வேண்டுமா? இந்த பயிற்சிப்பாடத்தினை பாருங்கள்.
Want to join the conversation?
No posts yet.