முக்கிய உள்ளடக்கம்
தற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:38
குறிச்சொற்கள்

காணொலி எழுத்துப்படி

இப்பொழுது வடிவங்களை வைத்து கணக்குகளை போடுவோம். நம்மிடம் 3 வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன. நட்சத்திரங்கள், சதுரங்கள் , மற்றும் முக்கோணங்கள் . ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவு 5 நட்சத்திரங்கள், 3 சதுரங்கள் , 6 முக்கோணங்கள் உள்ளன . இதன் கூட்டுத் தொகையை பார்க்க , நட்சத்திரங்கள் 5 , சதுரங்கள் 3 , முக்கோணங்கள் 6 . ஆக மொத்தம் எத்தனை ? இதை நாம் மனக்கணக்காகவே போடுவோம் . சரி, மூன்று வடிவங்களின் கூட்டுத்தொகையயும் பார்க்க வேண்டும். நம்மிடம் உள்ள வடிவங்கள் எத்தனை ? 3 அடுத்து, அவற்றின் எண்களைக் கூட்டுவோம் . இதன் கூட்டுத் தொகைதான் நமக்கு வேண்டியது . இந்த மூன்றையும் கூட்டினால், கிடைக்கும் தொகை என்னவாக இருக்கும் ? இங்கே 5 + 3 என்ன ? 5 நட்சத்திரங்கள் மற்றும் 3 சதுரங்கள் . ஆக 5 + 3 = 8 . 8 ற்கு பிறகு நாம் இன்னும் 6ஐ கூட்ட வேண்டும் . 8 + 6 என்ன கிடைக்கும் ? இது நமக்கு மனக்கணக்காக தெரிந்தாலும் அதை எண்ணி பார்ப்பதுதான் நல்லது . அது தான் மனதில் பதியும் . அதனால், நாம் ஒரு முறை வாய் விட்டு சொல்லி பார்க்கலாம் . 8 + 6 அதன் விடை 14 . ஆக 5 + 3 + 6 = 14 இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம் . இதே வரிசை படி தான் செய்ய வேண்டுமா ஏன்று நீங்கள் கேட்க்கலாம் ? வேறு வழியில் கூட முயற்சிக்கலாம் . 5 + 3 + 6 என எழுதலாம் . 5 + 3 என்று முதலில் கூட்டுவதற்கு பதிலாக 3 +6 என்று முதலில் கூட்டுவோம் . 3 உடன் 6 ஐ கூட்டினால் என்ன விடை . ஆம், 9 என்று வரும் . அடுத்து நாம் 5 + 9 என்று கூட்டப் போகிறோம் . இதுவும் நமக்கு முன்பே தெரிந்தது தானே , அதன் கூட்டுத்தொகை 14 என்று தெரிந்தாலும் . அதை நாம் மனதில் வைத்துக் கொள்வது நல்லது . மீண்டும் ஒரு முறை செய்து பார்க்கலாம் . 5 + 9 = 14 கூழங்கற்களைக் கொண்டு , கணக்கு போட முதலில் 5 கூழங்கற்களையும் அடுத்து, மேலும் 9 கூழங்கற்களையும் எடுத்துக் கொள்வோம் . அவை இரண்டையும் கூட்டினால், நமக்கு கிடைக்கும் தொகை மொத்தம் 14 . அதை அப்படியே மனதில் வைத்துக் கொள்வது நல்லது . இதை இன்னோரு முறையிலும் செய்யலாம் . 5 யும் 6யும் கூட்டினால் கிடைப்பது 11 . அத்துடன் 3 ஐக் கூட்டினால் 14 . எப்படி பார்த்தாலும் நம்மிடம் உள்ள மூன்று வடிவங்களின் கூட்டுத் தொகை 14 .