முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 6
Lesson 1: 1கள், 10கள், மற்றும் 100களைக் கூட்டுதல்3-இலக்க எண்களை கூட்டுதல் (மறுகுழுவமைத்தலின்றி)
சால் இடமதிப்புகளைக் கொண்டு 327 + 251 ஐ கூட்டுகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இந்த காணொளில நாம கூட்டல் கணக்க பத்தி பாக்கப் போறோம் . எங்கிட்ட இங்க 2 எண்கள் இருக்கு . நா இப்போ இந்த இரண்டு எண்களயும் கூட்டப் போறேன். இதுல முதல் எண்ணா 327 அப்படின்னு கொடுத்துருக்காங்க. அதாவது 3 நூறுகள் . அப்போ இந்த 3 என்பது நூறுகள் இடத்துல இருக்கு . அத நாம இங்க எழுதுவோம் . இங்க பாருங்க மூன்று நூறுகள் . இந்த ஒவ்வொரு பெரிய சதுரமும், சின்ன சின்ன 100 சின்ன சதுரங்கல உள்ளடக்கியது . அதாவது இந்த 3ம் 3 நூறுகள் . அடுத்ததா என்கிட்ட 2 பத்துகள் இருக்கு . இந்த 2 பத்துகளும், பத்தாவது இடத்துல இருக்கு . இதோ இந்த 2 பத்துகள இங்க எழுதுறே, நா அதுக்குண்டான நிறத்துல எழுதுறேன், சரி, அடுத்ததா என்கிட்ட 7 ஒன்றுகள் இருக்கு . அதாவது 7 ஒன்றுகள் ஒன்றாவது இடத்துல இருக்கு . இதோ 7. ஒன்றாவது இடத்துல இங்க பத்திங்கன்னா, 7 ஒன்றுகள் . இத இங்க குறிச்சிக்கலாம் . சேர்த்து படிக்கனும் அப்படின்னா, 3 நூறுகள் 2 பத்துகள், மற்றும் 7 ஒன்றுகள் . அப்படி இல்லைனா, 327னும் சொல்லலாம் . இப்ப நானு இந்த எண்ணோட 251ஐ கூட்ட போறேன். இதையே வேற மாறி சொல்லனும்னா, இரண்டு நூறுகள கூட்ட அதாவது, இந்த 2 நூறுகளோட இடத்துல இருக்கு . இதோ 2 நூறுகள் . இது 1 நூறு இது 2 வது நூறு . அடுத்ததா 50 என்பது அதே போல, 5 பத்துகள் . அத நாம இப்போ பாக்கலாமா ? 5 என்பது பத்தாவது இடத்துல இருக்கு . இந்த 5யும் நாம ஒரே நிறத்துல குறிச்சிக்கலாம் . இப்போ 5 பத்துகள இங்கே குறிக்குறேன். 1, 2, 3, 4, 5 . 5 பத்துகள் . கடைசியா இந்த ஒன்றை, 1வதுஇடத்துல குறிச்சிக்குவோம் . அதாவது இந்த 1 ஒன்னாவது இடத்துல இருக்கு . இது ஒன்று . இங்கே காணொளிய கொஞ்சம் நிறுத்திட்டு, 2 எண்களையும் கூட்டுங்க பார்க்கலாம் . சரி , நாமலே இத செய்யலாம் . அதாவது நம்மகிட்ட இருக்கக் கூடிய, 7 ஒன்றுகளோட ஒரு ஒன்ற கூட்டும்போது , எத்தனை ஒன்றுகள் கிடைக்கும் . சரியா சொன்னிங்க . 7 ஒன்றுகளோட ஒரு ஒன்ற கூட்டும் போது 8 ஒன்றுகள் கிடைக்கும் . இதோ இங்க, 7 மற்றும் 1 அதாவது 8 ஒன்றுகள் . 7 + 1 = 8 இப்போ அடுத்ததா பத்துகள பாக்கலாம் . என்கிட்ட இப்போ 2 பத்துகள் அப்புறம் 5 பத்துகள் இருக்கு . இதை கூட்டினால் நமக்கு 7 பத்துகள் கிடைக்கும் . 2 பத்துகள் + 5 பத்துகள் என்பது 7 பத்துகள். இப்போ 3 நூறுகளோட 2 நூறுகள கூட்ட போறோம் . எத்தன நூறுகள் இருக்கு ? ஆம்... 5 நூறுகள் இருக்கு . இத இங்க குறிச்சிக்குவோம் . அதாவது 5ஐ நூறாவது இடத்தில் குறிப்போம் . 327 + 251 இதுக்கான விடை 578 . அதாவது 5 நூறுகள் 7 பத்துகள், 8 ஒன்றுகள் இந்த கூட்டல் கணக்கு உங்களுக்கு சுலபமா புரிஞ்சிருக்கும்னு நம்புறேன் .