முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 5
Lesson 7: 100க்குள் கழித்தல்கள்மறுகுழுவமைத்தலுடன் கூடிய கழித்தல் ( கடன் வாங்குதல்)
சால் பத்துகள் மற்றும் ஒன்றுகளை கருத்தில் கொண்டு 83-ல் இருந்து 25-ஐ கழிக்கிறார் கழிக்கிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இதுவும் ஒரு சாதாரண கழித்தல் கணக்கு தான் ஆனால் சற்று வித்தியாசமானது சரி நம்மால் இருபத்தைந்தை என்பத்து மூன்றில் இருந்து கழிக்க முடியும் என்றால் என்பத்து மூன்றில் இருபத்தைந்தை கழிக்க முடியும் தானே இது போன்ற பல கழித்தல் கணக்குகளை நாம் செய்திருக்கிறோம் நீங்களே கூட முயற்சித்துப் பார்க்கலாம் இந்த கணக்கை நாம் எப்படி செய்வது நாம் முதலில் ஒன்றின் இடத்தை எடுத்துக்கொள்வோம் மேலே ஒன்றின் இடத்தில் உள்ள மூன்றில் எப்படி ஐந்து ஒன்றுகளை கழிக்க முடியும் ஐந்து ஒன்றுகளை மூன்று ஒன்றுகளில் கழிக்கமுடியாது தான் ஐந்து மூன்றை விட பெரியது நாம் என்ன செய்வது, கவலை வேண்டாம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இப்பொழுது நாம் நமக்கு முன்பே பரிச்சயமான மறு ஒழுங்கு செய்து கொள்ளலாம் பத்தின் இடத்தில் இருந்து சிறிய மதிப்பை எடுத்து அதை ஒன்றின் இடத்தில் வைக்கப்போகிறோம் நாம் இதை எப்படி செய்யப்போகிறோம் என்றால் இதனை மாறுபட்ட மூன்று வழிகளில் செய்யப்போகிறோம் அது என்ன என்பது உங்களுக்கு தெரிந்தது தான் நமக்கு இந்த மூன்றின் இடத்திற்கு மேலும் சில ஒன்றுகள் தேவை அதாவது இந்த ஒன்றின் இடத்தில் ஐந்தை விட பெரியதான எண் தேவை, இதை எப்படி செய்வது நமக்கு தேவையான கூடுதல் ஒன்றுகளை பத்தின் இடத்தில் இருந்து எடுத்துக்கொள்வோம் இங்கு இருக்கும் எட்டு பத்துகளிலிருந்து ஒரு பத்தை எடுத்துக்கொள்ளலாம், அப்பொழுது இங்கு ஏழு பத்துகள் மீதமாக இருக்கும் இதிலிருந்து ஒரு பத்தை எடுத்திருப்பதால் அதனை ஒன்றின் இடத்தில் வைக்கிறோம், எனவே பத்து கூட்டல் மூன்று பதிமூன்று ஆகிறது பத்து கூட்டல் மூன்று சமம் பதிமூன்று இல்லையா, இப்பொழுது என்பத்து மூன்று என்பது எட்டு பத்துகள் மற்றும் மூன்று ஒன்றுகள் இதை ஏழு பத்துகள் மற்றும் பதிமூன்று ஒன்றுகள் எனவும் கூறலாம், இதனை மற்றொரு முறையில் அதாவது நமக்கு முன்பே தெரிந்த முறையில் செய்யப்போகிறோம் முதலில் இதை நிறைவு செய்து விடவும் இப்பொழுது பதிமூன்று ஒன்றுகள் கழித்தல் ஐந்து ஒன்றுகள், அதாவது கழித்தலுக்குப்பின் எட்டு ஒன்றுகள், பிறகு பத்தின் இடத்தில் ஏழு பத்துகள் கழித்தல் இரண்டு பத்துகள் அதாவது ஐந்து பத்துகள் எனவே நமது விடை ஐந்து பத்துகள் மற்றும் எட்டு ஒன்றுகள் அதாவது ஐம்பத்தி எட்டு நாம் முன்பே பார்த்தது போல இதனை வேறு வகையில் முயன்று பார்ப்போம் வேறு முறையில் எப்படி செய்வது என்பத்து மூன்று என்பதை எப்படி எழுதலாம் என்பத்து மூன்று என்பதும் என்பது கூட்டல் மூன்று என்பதும் சமம் தானே என்பது கூட்டல் மூன்று அதாவது என்பத்து முன்று இன்னொரு வகையில் எட்டு பத்துகள் மூன்று ஒன்றுகள், இருபத்து ஐந்து என்பதும் அதே போலத்தான் இருபது கூட்டல் ஐந்து என்று கூறலாம் இருபது கூட்டல் ஐந்து இப்பொழுது இருபது கூட்டல் ஐந்தை கழிக்கப்போகிறோம் இதனை பழைய முறைக்கு பதிலாக நாம் இருபதை கழிக்கப்போகிறோம் அதாவது முதலில் இரண்டு பத்துகள் அதன் பிறகு ஐந்து ஒன்றுகளை கழிக்கப்போகிறோம் எனவே இருபத்து ஐந்தை கழிப்பது என்பது இதுபது மற்றும் ஐந்தை கழிப்பதற்கு சமமாகும் இந்த முறையில் இதனை செய்து முடித்துவிடுவோம் முதலில் ஒன்றின் இடத்திற்கு செல்வோம் மீண்டும் நாம் அங்கே பார்ப்பது ஐந்து மூன்றில் இருந்து ஐந்தை எடுக்க
வேண்டும் என்றால் அது மிகவும்
கடினமானது, எனவே இங்கிருந்து ஒரு பத்தை எடுத்தால் என்ன இங்கிருந்து ஒரு பத்தை எடுத்தால் அது எழுபது ஆகும் இங்கு எடுத்த பத்தை ஒன்றின் இடத்தில் வைப்போமானால் பத்து கூட்டல் மூன்று பதிமூன்று ஆகும் எண்களின் மதிப்பு எதுவும் மாறவில்லை எழுபது கூட்டல் பதிமூன்று என்பதும் என்பது கூட்டல் மூன்று என்பதும் என்பத்து மூன்று தான் இப்பொழுது மிகவும் வசதயானது என்னவென்றால் ஒன்றின் இடத்தில் பதிமூன்றில் இருந்து ஐந்தை கழிப்பது தான் பதிமூன்று கழித்தல் ஐந்து என்பது எட்டாகும் ஏழு பத்துகளில் இருந்து இரண்டு பத்தை கழித்தால் அதாவது எழுபது கழித்தல் இருபது என்பதில் நமக்கு கிடைக்கும் விடை ஐம்பது இந்த ஐம்பதுடன் எட்டை கூட்டுவதுடன் நிறைவடையும் அதாவது ஐம்பது கூட்டல் எட்டு சமம் ஐம்பத்து எட்டு ஐந்து பத்துகள் மற்றும் எட்டு ஒன்றுகள் இப்பொழுது இரண்டு பயிற்சி முறைகள் முடிந்துவிட்டன அடுத்து மூன்றாவது முறை எப்படிப்பார்த்தாலும் கழித்தல் தான் நாம் வேறு வேறு முறைகளில் எழுதிக்கழிக்கிறோம் அவ்வளவுதான். இதை என்பத்திமூன்று என்று எழுதலாம் எட்டு பத்துகள் கூட்டல் மூன்று ஒன்றுகள் இது பத்தின் இடம் இது ஒன்றின் இடம் எட்டு பத்துகள் மூன்று ஒன்றுகள் இரண்டு பத்துகள் மற்றும் ஐந்து ஒன்றுகளை கழிக்கப்போகிறோம், எனவே இது இரண்டு பத்துகள் மற்றும் கழித்தல் மூன்று ஒன்றுகளா இல்லை இல்லை கழித்தல் ஐந்து ஒன்றுகள் இருபத்து ஐந்து என்பதும் இருபது கூட்டல் ஐந்து என்பதும் ஒன்றுதான் இருபத்து ஐந்தை கழிப்பதும் இருபது மற்றும் ஐந்தை கழிப்பதும் ஒன்று தான் அதே போல இரண்டு பத்துகள் மற்றும் ஐந்து ஒன்றுகளை கழிப்பதும் சமம் தான் இரண்டு பத்துகள் மற்றும் ஐந்து ஒன்றுகள் சரி இப்பொழுது இதற்கான விடையை காணலாம் எனவே இதற்கான விடையை காண்கிறபோது மூன்று ஒன்றுகளில் இருந்து ஐந்து ஒன்றுகளை கழிக்க முடியாது எனவே இதன் மதிப்பை பெரிதாக்குகிறோம் இப்பொழுது பத்தின் இடத்தை மறுஒழுங்கு செய்கிறோம் இதை எட்டு பத்துகள் என்பதற்கு பதிலாக இதிலிருந்து ஒரு பத்தை எடுத்துக்கொண்டு ஏழு பத்துகள் என எழுதுக்கிறோம் பிறகு இந்த பத்தை ஒன்றுகளின் இடத்தில் சேர்க்கப்போகிறோம் ஒரு பத்து என்பது பத்து ஒன்றுகளுக்கு சமம் இதில் மூன்றைக்கூட்டினால் பதிமூன்று கிடைக்கும் இதை கழித்தால் பதிமூன்றில் ஐந்தை கழித்தால் எட்டு ஒன்றுகள் கிடைக்கும் பிறகு ஏழு பத்துகள் கழித்தல் இரண்டு பத்துகள் விடை ஐந்து பத்துகள் அவ்வளவுதான், இவை அனைத்தும் மறு சீரமைத்தலின் மாறுபட்ட வழிமுறைகள் இது உங்களுக்கு புரிகிறது தானே.