முக்கிய உள்ளடக்கம்
அடிப்படைக் கணிதம்
Course: அடிப்படைக் கணிதம் > Unit 5
Lesson 5: 100 -க்குள் கூட்டுதல் மற்றும் கழித்தலுக்கான யுக்திகள்- பத்து குழு அமைத்தல் மூலம் 53 + 17 ஐ கூட்டுதல்
- பத்துகளாக அமைப்பதன் மூலம் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல்
- பத்துகளின் குழுக்களாக அமைப்பதன் மூலம் கூட்டுதல்
- பத்துகளை உருவாக்குவதன் மூலம் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 2
- இரண்டு இலக்க எண்களை கூட்டுவதற்கான யுக்திகள்
- 100 க்குள் கூட்டுவதற்கான யுக்தியை தேர்வு செய்
- எண்கோட்டினை கொண்டு கூட்டுதல் மற்றும் கழித்தல்
- எண்கோட்டினைப் பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல்
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
இரண்டு இலக்க எண்களை கூட்டுவதற்கான யுக்திகள்
சால் 2-இலக்க எண்களை கூட்டுவதற்கான பல யுக்திகளை பின்பற்றுகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இந்த காணொளில ஈரிலக்க எண்கூட்டல எப்படி எளிமையா செய்ய முடியும் என்ற வழிமுறைய பாக்க போறோம். 78 யும் 9 யும் நாம இப்போ கூட்டனும். நமக்கு எதல்லாம் எளிமையா செய்ய முடியுமோ, அத முதல்ல செய்யலாம். இப்போ 77 உடன் 10ஐ கூட்டலாம். அதாவது 78க்கு பதிலா 1 குறைத்து 77 எழுதுவோம். மேலும் 9 என்பதை 10 என மாற்றி எழுதலாம். 78லிருந்து 1ஐ எடுத்து அதை 9ல் சேர்த்து அதை 10 உடன் கூட்டினால், எந்தவித மாற்ற்மும் இந்த விடைல ஏற்படாது. 78 + 9 = 77 + 10 . இரண்டோட கூட்டுத் தொகையும் ஒரே விடையாதா கிடைக்கும். இப்படி கணக்கிடுவது நமக்கு ரொம்ப எளிமையாகவும் இருக்கும். இப்போ இதையே நாம இன்னொரு முறைல செய்யலாம். 7 பத்துகளையும், 8 ஒன்றுகளையும் கூட்டும்போது நாம அதோட சேர்த்து, 10 ஒன்றுகள கூட்டுறப்போ அது சரியா வராது. ஏன்னா 7 என்ற எண்ணை 7 ஒன்றுகளா எடுத்துகிட்டா தா, அது சரியானதா இருக்கும். நாம இதே மாரி வேறு சில எடுத்துகாட்டுகளையும் பாக்கலாம். நீங்க ஒரு உக்திய தேர்ந்தெடுத்துகிட்டு, அத நோக்கி அதே மாதிரியே செய்ய ஆரம்பிக்கனும். இப்போ 35 ஐ 15 உடன் கூட்ட வேண்டும். இதுல, எதெல்லாம் சரியா இருக்கும் அப்படின்னு பாக்கலாம். 35 உடன் 15 ஐ கூட்ட முதலில் 35 உடன் 5ஐ கூட்ட வேண்டும். அப்புறமா 10ஐ அதோட சேர்த்து கூட்ட போறோம். இப்போ நாம என்ன செஞ்சிருக்கோம்னா, ஞ்15 ஐ 10 மற்றும் 5 என் இரண்டா பிரிச்சி இருக்கோம். இதோட கூட்டுத் தொகை 15 தா அதனால இதோட பதில் எந்த வகையிலும் மாற்றமடையாது. இத நாம மனக்கணக்காவே செஞ்சிடலாமே, அடுத்ததா நாம 30யும் 20 யும் கூட்ட போறோம். நாம இப்போ 35 ஐ 30 அப்புறம் 5 என பிரிச்சி எழுத போறோம். இரண்டாவது எண்ணை ஐந்து, ஐந்தா கூட்டி எழுத போறோம். ஆகையால 35 லிருந்து 5 ஐ வெளிய எடுத்துட்டா மீதி 30 இருக்கு. இப்போ நீக்கிய இந்த 5 ஐ 15 உடன் சேர்த்தால் 20 ஆகும். அதாவது 30 + 20 சமம் என்பது 3 பத்துகள், மற்றும் 2 பத்துகள கூட்டினா 50 கிடைக்கும். இப்போ அடுத்த கணக்குக்கு போகலாம். 41 ஐ 52 உடன் கூட்ட வேண்டும். இப்போ நாம 40 உடன் 52 ஐ கூட்டி அதோட மீதி இருக 1ஐ கூட்டினா அதாவது, 41 ஐ 40 என எடுத்துக் கொண்டு 52 ல எந்த வித மாற்றமும் இல்லாம அப்படியே அத கூட்டனும். அதோட விடையான 92 உடன் 1 யும் கூட்ட வேண்டும். இது மூலமா நாம கூட்டல ரொம்ப எளிமையா செய்ய முடியும். இத இன்னொரு முறைல சொல்லனும் அப்படின்னா 50 லிருந்து 2 ஐ நீக்கிவிட்டு அத 41 உடன் கூட்டனும் அதாவது 41 + 2 = 43. இதோட 50 ஐ கூட்டினால் நமக்கு 93 என்ர விடை கிடைக்கும். இங்க நாம 2 ஐ ஒரு எண்ணிலிருந்து நீக்கி மற்றொரு எண்ல சேர்ப்பது மூலமா கூட்டல செஞ்சி ஒரே விடையான 93 ஐ பெறுவோம். கூட்டல் கணக்குகள் பொதுவாவே எல்லா வகைலயுமே செய்யக் கூடியதாகவும், எல்லா முறைலயும் செய்யக் கூடியதாகவும் அமைந்திருப்பது தான் இதன் சிறப்பம்சம்.