If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: அடிப்படைக் கணிதம் > Unit 5

Lesson 5: 100 -க்குள் கூட்டுதல் மற்றும் கழித்தலுக்கான யுக்திகள்

எண்கோட்டினை கொண்டு கூட்டுதல் மற்றும் கழித்தல்

2-இலக்க எண்களின் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு எந்த எண்கோடு பொருந்தி போகும் என சால் குறிப்பிடுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இங்க இருக்க கூடிய ரெண்டு எண் கோடுகள்ல, எந்த எண் கோடு, 47 கூட்டல் 22அ காட்டுது? முதல் எண் கோடு, 47 ல தொடங்குது, இல்லையா ? அதோட 20த கூட்டி, 67ல வந்திருக்கு. அதோட மேலும் ஒரு 2அ கூட்டி, 69ல வந்து நிக்கிது. இங்க மொதல்ல. 20 கூட்டப்பட்டு இருக்கு, அதுக்கு அப்பறம், மேலும் ஒரு 2 கூட்டப்பட்டு இருக்கு, இல்லையா ? அப்படின்னா, இது சரியானது தான்னு நினைக்கிறேன். இப்போ மீதம் இருக்குற, 2 எண் கோடுகளை பார்க்கலாம். 2வதா இருக்ககூடிய இந்த எண் கோட்டுல, 47ல இருந்து 2ட கூட்டி இருக்காங்க. மேலும், 49த அடைஞ்சிட்டு, அங்க இருந்து ஒரு 2அ கூட்டி, 52கிட்ட வந்து இருக்காங்க. இது 22அ கூட்டுர முறை இல்லை இல்லையா ..! இந்த 2 கூட்டல் 2 அப்படிங்கறது. 4ங்கற விடையதான் கொடுக்கும். ஆனா மேல உள்ளத பாத்திங்கனா, 22அ கூட்டுறதுக்கு, மொதல்ல 20த குட்டிட்டு, அதுக்கு அப்புறம் மேலும் ஒரு 2அ கூட்டி இருக்காங்க. இங்க அப்படி கூட்டப்படாததனால, 2வது எண் கோடு தப்பான விடை. 3வதா இருக்குற எண் கோட்டுல, மொதல்ல 20 கூட்டுறாங்க, அதுக்கு அப்புறமா, மேலும் ஒரு 2அ கூட்டுறாங்க. ஆனா ஒன்னு, இங்க 47ல இருந்து, இந்த எண் கோடு தொடங்கல பாருங்களேன். இங்க எண் கோடு, 74ல இருந்து தொடங்குது. அப்போ, 74 கூட்டல் 22 ன்னு ஆயுடும் இல்லையா ? அப்படின்னா, இந்த எண் கோடும் சரியான விடை கிடையாது. அப்போ முதல் விடைதான் சரியான விடை. இது ரொம்ப ஆர்வமா இருக்கறதனால, இதே மாதிரி, மேலும் சில எடுத்துக் காட்டுகள பார்க்கலாமா.? இங்க எந்த எண் கோடு, 93 கழித்தல் 76அ காட்டுது ? நல்லா கவனிங்க, இங்க கழித்தல்ல வந்திருக்கு. நீங்க இங்க பார்த்திங்கனா, கொடுக்கப்பட்ட எல்லா எண்களுமே, 93ல தொடங்குது. மொதல் கோட்டுல, நாம 7அ கழிக்கிறோம். அதுக்கு அப்புறமா,, 6அ கழிக்கிறோம். ஆனா நாம கழிக்க வேண்டியது, 76ங்கற முழு எண்ணத்தான், அப்படின்னா நமக்கு, எப்படி இருந்து இருக்கனும் தெரியுமா ? மொதல்ல 70அ கழிச்சு இருக்கனும், அதுக்கு அப்புறம் தான் 6அ கழிச்சி இருக்கனும். வெறும் 7அ மட்டும் கழிக்க வேண்டியது இல்லை. அதனால தான் முதல் விடை தப்பு இரண்டாவதா, இந்த இடத்தில, மொதல்ல நாம 60அ கழிக்கிறோம், அதுக்கு அப்புறமா தான் 7அ கழிக்கிறோம். ஆனா இது ரெண்டுத்தையும் சேர்த்தா 67தன வருது. நமக்கு வேண்டியது 76 தான? அதாவது, 7 பத்துகளையும், 6 ஒன்றுகளையும் தான் நாம இப்போ கழிக்கணும்னு நினைக்குறோம் சரி இப்போ, முனாவதா இருக்குற எண் கோட்டுல, இப்போ மொதல்ல 7 பத்துகள கழிச்சு இருகாங்க, அதுக்கு அப்புறமா, 6 ஒன்றுகள கழிச்சு இருக்காங்க. அப்படின்னா, கட்டாயமா, இது தான் சரியான விடையா இருக்கும். ஏன்னா? அவங்க சரியா 76அ கழிச்சி இருக்காங்க. நமக்கு தேவையும் அதுதான. சரி இது கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கறதனால, மேலும் ஒரு கணக்க போட்டு முடிச்சிக்கலாம். இங்க எந்த எண் கோடு, 12 கூட்டல் 87அ காட்டுது? நீங்க பார்த்திங்கனா, இங்க இருக்குற எல்லா எண் கோடுகளும், 12டுல தொடங்குது பாருங்க. நமக்கு தேவையானது 87 இல்லையா ? அதாவது 8 பத்துகள், அப்பறம் 7 ஒன்றுகள் சரிதான? இங்க பார்த்த உடனேயே சொல்லிடலாம். இங்க முனாவது எண் கோட்ட பாருங்களேன். 80 கூட்டல் 7 இல்லையா ? அப்படின்னா, இது தான் சரியான விடை.