If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: அடிப்படைக் கணிதம் > Unit 5

Lesson 8: 100 - க்குள் வார்த்தைக் கணக்குகள்.

கூட்டல் வார்த்தை கணக்கு: குதிரைகள்

100 ஐ விட குறைவான எண்கள் கொண்ட கூட்டல் வார்த்தைக் கணக்கினை சால் தீர்க்கிறார்.

காணொலி எழுத்துப்படி

ஒரு விவசாயி தன்னோட செம்பழுப்புக் குதிரை அதாவது HAZEL HORSE என சொல்லக் கூடிய செம்பழுப்புக் குதிரை மற்றும் சிறிய குதிரை, அதாவது PAULY PONY என ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய சிறிய குதிரைக்கு, வேலி கட்டுறதுக்காக வேலி கம்பங்கள பயன்படுத்தினாரு. விவசாயி அந்த செம்பழுப்புக் குதிரைக்கு, 26 வேலிக் கம்பங்களையும், சின்ன குதிரைக்கு, 19 கம்பங்களையும் வேலிக் கட்ட பயன் படுத்துராரு. இப்போ விவசாயி மொத்தமா எத்தனை வேலிக் கம்பங்கல பயன்படுத்தினாரு என்பதுதான் கேள்வி . கணொளிய நிறுத்திட்டு இந்த கணக்க நீங்களே செஞ்சி பாருங்க. சரி, நீங்க முயற்சி செஞ்சிருப்பிங்கனு நம்புறேன். இப்போ நாம இந்த கேள்விய மறுபடியும் ஒரு தடவ யோசிச்சி பார்ப்போம். இத ஒரு கதை என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு விவசாயி தன்னோட செம்பழுப்பு மற்றும் குட்டி குதிரைக்காக வேலிக் கம்பங்களை நடுகிறார். இதுல இரடு குதிரைகளின் படங்களும் கொடுக்கப்பட்டிருக்கு. இதோ இங்க தான். இது இரண்டுமே ஒரே மதிரி இருக்கு. சரி, விவசாயி அந்த செம்பழுப்புக் குதிரைக்கு, 26 வேலிக் கம்பங்கள பயன் படுத்துறாரு. அப்போ இதோ இந்த இடத்துல 26 எண்ணிக்கை சரியா இருக்கு. இதோ இவைகள் தான் செம்பழுப்புக் குதிரையின் வேலிக்காக பயன்படுத்தப்பட்ட, செம்26 வேலிக் கம்பங்கள். நா இத எண்ணல, அவுங்க சொன்னத அப்படியே எடுத்துக்குறே. அடுத்ததா 19 கம்பங்கள குட்டிக்குதிரைக்கு வேலிக் கட்ட பயன்படுத்துறாரு. அப்படின்னா இங்க 19 வேலிக் கம்பங்கள் இருக்குது. இப்போ விவசாயி மொத்தமா எத்தனை கம்பங்கள பயன்படுத்தி இருக்குராரு ? இப்போ நாம என்னதான் செய்ய போறோம் ? இந்த எண்கள கூட்டனுமா ? கழிக்கனுமா ? இங்க USE IN ALL அப்படின்னு சொல்லபட்டிருக்கு. அதாவது மொத்தமா என்ற வார்த்த இங்க பயன்படுத்தப் பட்டிருக்கு. எத்தனை மொத்தக் கம்பங்கள் விவசாயி பயன்படுத்தினாரு அப்படின்னு கேக்கப்படுது. செம்பழுப்புக் குதிரைக்கும், குட்டிக் குதிரைக்கும் சேர்த்து மொத்தமா எத்தனை பயன்படுத்தி இருக்காரு ? இப்ப்டி ஒரு கேள்வி கேட்க்கப்பட்டா, நாம நமக்கு தரப்பட்ட இரண்டு எண்களையும் கூட்டனும்னு அர்த்தம். இப்போ நாம 26 மற்றும் 19 யும் கூட்டனும். செம்பழுப்பு குதிரைக்காக பயன்படுத்தப்பட்ட 26 கம்பங்கள காப்பி நிறத்துல எழுதலாம். அதோட இந்த 19 ஐ நீல நிறத்துல எழுதுறேன். எத்தனை கம்பங்கள் இந்த இரண்டு குதிரைகளுக்காக மொத்தத்துல பயன்படுத்தி இருக்காரு. அத கண்டுபிடிக்கனும்னா நாம இந்த இரண்டு எண்களையும் கூட்டனும். இப்போ இந்த 2 எண்களையும் ஒன்னா கூட்டலாம். இப்போ முதல்ல ஒன்றின் இட மதிப்ப கூட்டுவோம். 6 மற்றும் 9. இவை இரண்டும் ஒன்றின் இட மதிப்புல இருக்குது. இப்போ இவை இரண்டையும் கூட்டினால், நமக்கு 15 ஒன்றுகள் கிடைக்குது. ஆனா நாம ஒரு இட மதிப்ப மட்டும்தா, இங்க எழுத முடியும். இப்போ 15 ஒன்றுகள் என்பதை 5 ஒன்றுகளாவும், ஒரு 10 ஆகவும் எடுத்துக்கலாம். 15 என்பது ஒரு 10 மேலும் 5 ஒன்றுகள். இப்போ ஒரு 10 + 2 பத்துகள் + ரு 10 இத கூட்டினால், 1 + 2 + 1 = 4. அப்படினா 4 பத்துகள். அப்போ இதன் கூட்டு தொகை 45. இப்போ மொத்தமா எத்தனை வேலிக்கம்பங்கள் உபயோகிக்கப்பட்டிருக்கு ? ஆம்... 45. நா இந்த கணக்க நீங்களே செய்யுங்கனு சொன்னப்போ, அப்போ சிலபேர் இத கழிக்கனும்னு நினைச்சி கழிச்சிருக்காங்க. அது தவறுதான், ஏன்னா ஒரு வேளை விவசாயி குட்டிக்குதிரை வேலிக்கம்பங்கள விட, செம்பழுப்புக் குதிரைக்கு எத்தனை அதிக கம்பங்கள் பயன்படுத்தினாரு என கேட்டிருந்தா, அப்போ தான் நாம, 26 லிருந்து 19 ஐ கழிச்சிட்டு, வேறுபாட கண்டுபிடிச்சிருக்க முடியும். ஆனா அவுங்க அப்படி எதுவும் கேக்கல. அவுங்க எத்தனை வேலிக்கம்பங்கள், விவசாயி மொத்தமா உபயோகிச்சி இருந்தாங்கனு தான் கேட்டிருந்தாங்க. அதனால இத கூட்டுறதுதா சரியான முறை. இங்க கூட்டி வந்த விடை 45 ம் சரியான பதில்தான்.