முக்கிய உள்ளடக்கம்
3 ஆம் நிலை
Course: 3 ஆம் நிலை > Unit 4
Lesson 2: பெருக்கல் மற்றும் வகுத்தல் - ஒப்பீடுபெருக்கல் சொற்சிக்கல் - வாகனம் நிறுத்துமிடம்
சால், ஓர் படத்தையும் தொடர் கூட்டலையும் வைத்து பெருக்கல் சொற்சிக்கலுக்கு தீர்வு காண்கிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
ஒரு பெரிய மளிகைக்கடை தினமும் 9 மணிக்குத்திறக்குது. மளிகை கடை வாசல்ல 6
வரிசைகள் கார் நிறுத்த இடம் இருக்கு, ஒரொரு வரிசையிலும் 7 கார் நிறுத்தலாம் . ஒரொரு கார்லயும்
4 சக்கரம் இருக்கு. எவ்வளவும் கார் மொத்தம் நிறுத்த இடம் இருக்குங்கறது நாம பாக்கப்பபோறோம். கடை தினமும் 9 மணிக்கு திறக்குதுன்ட்றாங்க, அது அவசியமில்லாத இனபர்மேஷன். ஏன்னா, கேள்வி எத்தனை கார் நிறுத்தலாம்தான். எத்தன மணிக்கு தெறக்குது கடைங்கறதில்ல அதனால அத எடுத்துட்றோம், அடுத்தது ஒரொரு கார்லயும் 4 சக்கரம் இருக்குன்ட்றங்க எவ்வளவு சக்கரம் வெக்கப்போறோம்ன்னு கேள்வி இல்ல அதனால அதையும் எடுத்துட்றோம், மொத்த கார் நிறுத்த 6 வரிசை இருக்கு ஓரொரு வரிசையிலும் 7 கார் நிறுத்தலாம்னு சொல்றாங்க அது மட்டும் தான் இந்த கேள்விக்கு அவசியமான இன்பர்மேஷன் அத மட்டும் எடுத்து நாம தனியா எழுதிக்கிறோம். 6 x 7 ஐ பெருக்கினா நம்புளுக்கு மொத்தம் எவ்வளவு கார் நிறுத்த எடம் இருக்குன்னு பாத்துடலாம் அந்த 6 இன்டு 7 நாம இன்னொரு வகையிலும் யோசிக்கலாம். அது எப்படீன்னா...6 முறை 7 கூட்டினாலும் அதே பதில் தான் வரும். அதனால 6 முறை 7 நம்ப இப்படி தனியா போட்டு கூட்டப்போறோம். 7 ப்ளஸ் 7 ப்ளஸ் 7 ப்ளஸ் 7 ப்ளஸ் 7 னு 7 ப்ளஸ் 7 = 14 ப்ளஸ் 7 = 21, ப்ள்ஸ் 7 = 28, ப்ள்ஸ் 7 = 35 ப்ள்ஸ் 7 = 42 இதக்கூட்டி 42 வந்திருக்கு, தனியா நீங்க 6 இன்டு 7 பெருக்கி பாருங்க அதே பதில் தான் வரும். இத நான் படம் மூலமா இப்படி போட்டிருக்கேன் சுலபமா புரிஞ்சிக்கறதுக்கு 6 வரிசை கார்னு சொன்னோம் முதல் வரிசை, இரண்டாவது வரிசை, மூனாவது வரிசை, நாலாவது வரிசை, அஞ்சாவது வரிசை, ஆறாவது வரிசை ஓரோரு வரிசையிலும் 7 கார்னு சொன்னோம், அதையும் பாக்கப்போறோம். முதல் வரிசையில இது முதல் கார் ரெண்டு, மூணு, நாலு. அஞ்சு, ஆறு, ஏழு. இத எல்லாத்தையும் இப்போ நம்போ எண்ணப்போறோம். 7 ப்ளஸ் 7 = 14 ப்ளஸ் 7 = 21 ப்ளஸ் 7 = 28 ப்ளஸ் 7 = 35 ப்ளஸ் 7 = 42 சோ, மொத்தம் 42 கார்கள் வக்கறதுக்கு இங்க எடம் இருக்கு.