If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நிலப்பகுதிகளின் பரப்பளவுகளை ஒப்பிடல்

சால் இரு செவ்வகத்தின் பரப்பளவைக் கொண்டு வார்த்தைக் கணக்கை கண்டறிகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

Diya ஒரு வீட்டு மனைய வாங்கி ஒரு அழகான வீடு கட்ட நினைக்கிறாள் அப்படி பாத்துக்கிட்டு இருக்கப்போ... அவளுக்கு கடைசியா இரண்டு அழகான வீட்டு மனைகள் அருகருகே கிடைச்சிடுத்து இந்த இரண்டுல ஏதாவது ஒன்ன மட்டும் தான் அவள் வாங்கணும் 314159 அப்படிங்குற எண்ணுடைய apple lane வீட்டு மனையோட அகலம் 30 மீட்டர் நீளம் 40 மீட்டர் அதேபோல 11235 அப்படிங்குற எண்ணுடைய Fibonacci drive வீட்டு மனையோட அகலம்.. 50 மீட்டர் நீளம் 20 மீட்டர். இரண்டு மனகளோட விளையுமே ஒண்ணுதான். அதாவது 36000 dollar இப்போ Diya மனசுல இருக்குற கேள்வி என்னனா.. எத வாங்குனா அவளுக்கு லாபகரமா இருக்கும் அப்படிங்குரதுதான். எந்த மனை சிறந்த மனை அப்படிங்குறத அக்கம் பக்கம் இருக்கவங்ககிட்ட கேக்குறத விட. மனைகளோட பரப்பளவ கண்டுபிடிச்சி அதவாங்கணும் அப்படிங்குறது Diya ஓட எண்ணம். அப்போ நாம Diyaகு உதவி செய்யலாமா சரி.. ஒவ்வொரு மனையோட பரப்பளவை கண்டுபிடிக்கணும் அப்படின்னா.. பரப்பளவை கண்டுபிடிக்க நீளம் மற்றும் அகலத்த பெருக்கணும் நாம ஏற்கனவே படிச்சதுதான் பரப்பளவு சமம் நீளம் பெருக்கல் அகலம் இல்லையா நமக்கு கேள்வில என்ன சொல்லப்பட்டிருக்கு அப்படின்னா apple lane வீட்டு மனையானது செவ்வக வடிவத்துல இருக்கு அதனால அதோட பரப்பளவு நீளம் 40 மீட்டர் பெருக்கல் அகலம் 30 மீட்டர் 40ம் 30ம் சேர்ந்தா 1200 சதுர மீட்டர். சதுர மீட்டர் அப்படிங்குறதா ஆங்கிலத்துல square meters அப்படினு சொல்லுவாங்க. அப்படின்னா apple laneஓட பரப்பளவு. 1200 சதுர மீட்டர்கள் அடுத்ததா இரண்டாவதா இருக்கக்கூடிய Fibonacci drive வீட்டு மனையோட பரப்பளவானது. நீளம் 20 மீட்டர் பெருக்கல் அகலம் 50 மீட்டர்.. 20 பெருக்கல் 50 அப்படிங்குறது 1000 சதுர மீட்டர் எனவே Fibonacci drive வீட்டு மனையோட பரப்பளவு 1000 சதுர மீட்டர்கள். இப்போ 1200 சதுர மீட்டர் அளவுள்ள apple lane மனையில ஒரு மீட்டர் அளவுக்கு சின்னதா ஒரு பெட்டிகளை அடுக்க ஆரமிச்சா... ஒரு மீட்டர் ஒரு மீட்டர் ஒரு மீட்டர்னு போனா.. 1200 பெட்டிகளை அடுக்கலாம். அதேபோல 1000 சதுர மீட்டர் அளவுடைய Fibonacci drive வீட்டு மனையில இதே மாதிரி ஒரு மீட்டர் அளவுடைய சிறிய பெட்டிகளை அடுக்கிகிட்டே போனா... நம்மால 1000 பெட்டிகளை மட்டும்தான் அடுக்க முடியும். எனவே இந்த இரண்டு மனைகளையும் ஒப்பிட்டு பாக்கும்போது நமக்கு apple lane வீட்டு மணியோட அளவுதான் பெருசா இருக்கு. அதாவது 1200 சதுர மீட்டர்கள் இல்லையா.. அப்படின்னா apple lane அப்படிங்குற வீட்டு மனைய வாங்குறதுதான் Diyaக்கு லாபகரமா இருக்கும்.