If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

பின்னங்களின் அறிமுகம்

அலகு பின்னங்களை உருவாக்க சால் முழுபொருள்களை சம அளவுகளுடைய துண்டுகளாக பிரிக்கிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

நாம இந்த காணொலில சில பின்னம் சார்ந்த கருத்துக்களை பத்தி தெரிஞ்சிக்கப்போறோம் அமாம் பின்னம் அப்படின்னா என்ன..? இப்படி நான் கேட்ட உடனயே உங்களுக்கு சில எடுத்துக்காட்டுக்கள் மனசுல தோணும் இல்லையா.. பொதுவாவே ஒரு படம் வரைஞ்சி அதுக்கு விளக்கம் கொடுத்தா உங்களுக்கு சிறப்பா புரியும்.. அதனால இந்த சதுரத்த ஒரு முழு பகுதியா எடுத்துக்கலாம் முழு பகுதி அப்படிங்குறத whole அப்படின்னு நான் ஆங்கிலத்துல எழுதி இருக்கேன் அதாவது இது ஒரு முழுமையான சதுரம் அப்படின்னு அர்த்தம் இப்ப இந்த சதுரத்த 4 சம பகுதிகளா பிரிக்கப்போறோம் முதல கிடைமட்டமா ஒரு கோடு வரைஞ்சி 2 சம பாகங்களா பிரிக்கலாம் இப்ப செங்குத்தான ஒரு கோடு வரைஞ்சி அந்த அபத்த 4 சம பாகங்களா பிரிச்சாசு இப்போ நம்மக்கிட்ட 4 சம பாகங்கள் இருக்கு இல்லையா... இப்போ நான் இதுல ஒரு பகுதிய மட்டும் வண்ணம் இடப்போறேன் அ.... வண்ணம் இட்டு முடிச்சாச்சு இப்போ சொல்லுங்க இந்த படத்த பின்ன வடிவத்துல எப்படி எழுதுவீங்க..? சரி இப்ப நாம முழு பகுதிக்கும் இந்த கூடிட்டப்பகுதிக்கும் அதாவது வண்ணம் இட்ட பகுதிக்கும்மான பின்ன வடிவம் என்னனு பாக்கலாம். இப்போ இத நாம 4ல ஒரு பங்குனு சொல்லலாமா... அதாவது 4 சம பாகங்கள்ல ஒன்னு மட்டும் வண்ணம் இட்டு காட்டப்பட்டிருக்கு.. இதையே பின்ன வடிவத்துல 1/4னு எழுதலாம் வேற விதமா கூட இத சொல்லலாம் 4 சம பாகங்கள்ல 1 அப்படின்னும் சொல்லலாம் அப்படி இல்லனா ஒரு முழு பகுதி வகுத்தல் 1 இந்த இரண்டுமே ஒன்னு தான் சரி இப்போ இதே மாதிரி வேறொரு எடுத்துக்காட்டப் பாக்கப்போறோம். இந்த முறை 1/8 அப்படிங்குறத குறிப்பிடுவோம். இதோ இங்க செவ்வக வடிவத்துல இருக்கு இல்லையா.. இத ஒரு முழு பகுதி அப்படின்னு எடுத்துக்கலாம் அதாவது whole அப்படின்னு எழுதிக்கலாம்... இப்போ இத தான் நாம 8 சமபாகங்களா பிரிக்கப்போறோம் முதல 2 பாகங்களா பிரிக்கலாம் சரியா இருக்கு இல்லையா சரி மீண்டும் 2அ நாலு பாகங்களா பிரிக்கலாம் இப்போ இந்த நாலையும் 2 2ஆ பிரிச்சி 8 சம பாகங்களா ஆகிடலாம் நான் என்னோட வெறும் கையில வரையுரதுனால அளவுல கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கு என்ன பொறுத்த வரைக்கும் உன்ன்களுக்கு இந்த கணக்கு புரிஞ்சா சரி இப்போ நம்ம கிட்ட 8 சம பாகங்கள் இருக்கு இப்போ இதுல இருந்து ஒன்ன மட்டும் நான் வண்ணம் இட போறேன் நீங்க என்ன நெனச்சீங்க நான் முதல் கட்டத்துக்கு வண்ணம் இடுவனு தானே நெனச்சீங்க எப்போவுமே முதலாவது கட்டத்தான் தேர்வு செஞ்சி வண்ணம் இடனும்னு ஒன்னும் அவசியம் கிடையாதே மறுபடுயும் நான் கோடிட்டு காட்டுன கட்டம் அதாவது வண்ணம் இட்டு காட்டுன கட்டம் 8ல ஒரு பங்கு இல்லையா இப்போ மேலும் சில எடுத்துக்காட்டுகளை பாக்கலாம் இந்த இடத்துல தான் நான் உங்களுக்கு ஒரு சின்ன தேர்வ வேக்கப்போறேன் ஒன்னும் பயப்பட வேண்டாம் ரொம்ப சுலபம்தான் கொஞ்சம் நேரம் உங்க காணொலிய நிறுத்திட்டு நான் சொல்லுறத மட்டும் எழுதுங்க. இந்த ஊதா நிறத்துக்கும் இந்த சிவப்பு நிறத்துக்கும்மான பின்ன வடிவம் என்ன..? அத நீங்க எழுதணும் அப்புறமா இந்த நீல பகுதிய முழு பகுதியா வெச்சிக்கிட்டா... இந்த சிகப்பு பகுதியோட பின்ன வடிவம் என்ன..? மூனாவதா இந்த மஞ்சள் நீல முக்கோணத்த முழுஹ் பகுதியா வெச்சிக்கிட்டா... சிகப்பு நிறத்தொட பின்ன வடிவம் என்னனு கண்டுபிடிக்கணும். இப்போ நீங்க காணொலிய நிறுத்திட்டு இந்த கேள்விகளுக்கான விடைய கண்டுபிடிங்க சரி இப்போ நாம இந்த கேள்விக்கான விடைய பாக்கலாம் முதல செவ்வகத்த எடுத்துக்கிட்டா 3 சம பாகங்கள் இருக்கு இல்லையா அதுல ஒன்னு மட்டும் தான் சிகப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கு அப்படின்னா இந்த பின்னம்.. 3ல ஒரு பங்கு இல்லையா... அடுத்ததா இந்த பை வடிவ படத்துல இந்த படத்த பை வடிவம்னு சொல்லுறதுண்டு இந்த பை வடிவ படத்துல 1,2,3,4,5 சாம பாகங்கள் இருக்கு இதுல ஒன்னு மட்டும் சிகப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கு இப்போ இந்த ஒரு சின்ன பை துண்டு மொத்த பைல 5ல ஒரு பங்கு இல்லையா... அ.....அடுத்ததா கடைசியான கேள்வி இப்போ இதுல நாலு பாகங்கள் இருக்கு ஒன்னு மட்டும் சிகப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கு ஆனா நீங்க ஒரு விஷயத்த நியாபகம் வெச்சிக்கணும் பின்னங்கள் சம பாகங்களா இருக்குறது ரொம்பவே அவசியம் இதோ இந்த பகுதி இருக்கு இல்லையா இந்த பகுதி மற்ற பகுதிகளுக்கு சமமானதா இல்லை அதனால இந்த நாலும் சமமான பாகங்கள் கிடையாது அதனால தான் இத 4ல ஒன்னு அப்படின்னு சொல்லமுடியாது ஒரு வேல நீங்க இதுக்கு 4ல ஒன்னு அப்படின்னு தப்பா விடை எழுதிருந்தீங்க அப்படின்னா.. அத உடனே திருத்திக்கோங்க அப்படி இதுக்கு நீங்க சரியான விடைய சொல்லி இருந்தீங்க அப்படின்னா... உங்கள நீங்களே பாராட்டிக்கொங்க