If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

3 இலக்க எண்களைக் கழித்தல் (மறுகுழுவமைத்தல்)

629-172 என்ற கழித்தலுக்கு மறுகுழுவமைத்தல் ( கடன் வாங்குதல்) மற்றும் இடமதிப்புகளை பயன்படுத்துதலை சால் பயன்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இப்போ நாம 629 லிருந்து 172ஐ கழிக்க போறோம். இங்க அந்த எண்களை விரிவாக்கி எழுதியிருக்கேன். 629 என்பதை 660 + 20 + 9 இப்படி எழுதியிருக்கோம், அதேபோல் -172 யும், 100 + 70 + 2 என பிரிச்சி எழுதியிருக்கேன். மொத்தம் 172. இப்போ 1ன் இட மதிப்பிலிருந்து கழிக்க தொடங்கலாம். 9 - 2 = 7 . அதேபோல இங்கயும், 9 - 2 = 7 . அடுத்து பத்தின் இடம், இப்போ 2லிருந்து 7ஐ கழிக்கனும். குறை எண்கள பத்தி நாம இன்னும் கத்துக்கவே இல்லயே, ஒரு சிறிய எண்ல இருந்து எப்படி பெரிய எண்ணை கழிக்கிறது ? இதுக்குதா நாம இனமாற்று கழித்தல் முறைய பயன்படுத்த போறோம். அதுக்காக தா நா இந்த எண்கள பிரிச்சி எழுதுனே, இப்போ 20லிருந்து 70ஐ கழிக்க முடியாது. அதனால வேற எங்கிருந்தாவது நாம மதிப்ப வாங்கிக்கனும். இப்போ நூறுகளின் இடத்துல இருக்கிற மதிப்பு 600. அதுல ஒரு நூற எடுத்துட்டா, ஒரு நூறு ஆகிடும். அங்க எடுத்த ஒரு நூற பத்தாவது இடத்துக்கு தரலாம். இப்போ ஒரு நூற 10ன் இடத்துக்கு தந்தால், 100 + 20 = 120 . இதுல கவனிக்க படவேண்டியது என்னனா, 629ன் மதிப்ப இதுல மாற்றவே இல்ல. நூறுகளோட இடத்துல இருந்து ஒரு நூற எடுத்து, பத்தின் இடத்துக்கு தந்திருக்கோம். இப்போ நீங்க கவனிச்சிங்கன்னா, 500 + 120 + 9 = 629 . நாம மதிப்ப மாத்தவே இல்ல, சரி இப்போ நாம என்ன செய்யலாம். 600லிருந்து 100ஐ எடுத்தால் 500 கிடைக்கும். அந்த நூற, பத்தின் இடத்துக்கு தந்ததால பத்து பத்துகள். அப்படின்னா இது இப்போ 12 என ஆகும். இது 10ன் இடத்துல உள்ள 12 என்பதனால 12 பத்துகள். அப்படி இல்லன்னா, 120 எனவும் சொல்லலாம். நாம் இத கொஞ்சம் வேற விதமா செய்றோம். இதுதா இன மாற்று கழித்தல் முறை. 600லிருந்து 100ஐ வாங்கி 2ற்கு கொடுத்தோம். ஆனா 2 எப்படி 12 ஆக மாறியது. அதே மாதிரி 10ஐ ஏன் கூட்டனும். அதற்கு விடை என்னன்னா, இங்க பத்து பத்துகள், அல்லது ஒரு நூற கூட்டியிருக்கிங்க. 600லிருந்து 100ஐ எடுத்துவிட்டால் அது 500 ஆகிவிடும். 20 இப்போ 100 + 20 என மாறும். அப்போ மொத்தம் 120 . சரி, இப்போ நாம கழிக்கலாம். 12 பத்துகள் -7 பத்துகள். விடை 5 பத்துகள் அல்லது 120 - 70 = 50 கடைசியா 100 ளோட இடம். 5 - 1 = 4 . அதாவது, 500 - 100 = 400 . ஆக நம்மோட விடை 400 + 50 + 7 = 457 .