முக்கிய உள்ளடக்கம்
3 ஆம் நிலை
Course: 3 ஆம் நிலை > Unit 3
Lesson 4: 1000 -த்திற்குள் மறுகுழுவமைத்தலுடன் கூடிய கூட்டல்மூன்று இலக்க எண்களை கூட்டுதல்
மறுகுழுவமைத்தல் அல்லது சுமத்தல் விதியை பயன்படுத்தி 709+996, 373+88, மற்றும் 149+293 இவற்றின் கூடுதலை அறிதல். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நாம் இந்த காணொளியில் கூட்டல் கணக்குகளைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம். இங்கே மூன்று கூட்டல் கணக்குகள் உள்ளன. நீங்களே சற்று இந்த கணக்குகளை போட்டு பாருங்கள். மேலும் இட மாற்றிக்கொண்டு செல்லுதல் பற்றியும் சிந்தித்து பாருங்கள். முயற்சி செய்தீர்களா ? முயற்சி செய்தீர்ப்பீர்கள் என நம்புகிறேன். இப்போ நாம் இந்த கணக்கை சேர்ந்தே செய்வோம். 9 ஒன்றுகள் + 6 ஒன்றுகள் = 15 இதில் 5ஐ ஒன்றின் இடத்தில் எழுதி ஒன்றை கொண்டு செல்வோம். இங்கே 1 எதைக் குறிக்கிறது ? அதை நாம் 10ன் இடத்தில் எழுதியுள்ளோம். இந்த ஒன்று என்பது 10ற்கு சமம். அதாவது 9 + 6 = 15 . இது 10 + 5 ற்கு சமம். ஒரு 10 அதோடு 5. இப்போது 10ன் இடத்தில் 1 + 0 +9 = 10 . நாம் 0 ஐ இங்கு எழுதிவிட்டு 1ஐ கொண்டு செல்லலாம். 1 + 0 + 9 = 10 . இதன் உண்மையான அர்த்தம். ஒரு பத்து, 0 பத்து, 9 பத்து . இவற்றைக் கூட்டினால் 10 பத்துகள் அதாவது, 100 கிடைக்கும். நூறு என்றால் ஒரு 100, அதோடு பத்து 0 . இப்படித்தான் நாம் எண்களை கொண்டு செல்ல வேண்டும். இப்பொழுது 1 + 7 + 9 = 17 . இது நூறின் இடம் ஆகவே ஒரு 100 + 7 நூறுகள் + 9 நூறுகள் = 17 நூறுகள். அல்லது 1705, இதுதான் நமது விடை. அடுத்து நாம் இதை எடுத்துக் கொள்வோம். 373 + 78 இதை மாற்றி எழுதுவோம். அப்பொழுதுதான் நாம் கணக்கிட சரியாக இருக்கும். 3 + 8 = 11 . இதில் ஒன்றை ஒன்றின் இடத்திலும், மற்றும் ஒரு ஒன்றை பத்தின் இடத்திலும் எழுதலாம். ரு10 + 1 = 11 . அடுத்து 1 + 7 = 8 . அதோடு மற்றும் ஒரு 8 சேர்ந்தால் 16 . அதாவது 16 பத்துகள் . 16 பத்துகள் என்றால் அது 160. ஆக இந்த ஆறு 60ஐ குறிக்கும், அதோடு 1 + 3 = 4. இவை அனைத்தும் நூறுகள் ஆகவே, இது 4 நூறுகளை குறிக்கிறது. இதன் விடை 461. இறுதி கணக்காக 149 + 293 . 9 + 3 = 12 அதாவது 2 ஒன்றுகள் ஒரு 10 10ன் இடத்தில் 1. அதோடு 4 + 9 1 + 4 + 9 = 14 4ஐ இங்கே எழுதிவிட்டு 1 ஐ கொண்டு செல்வோம். நினைவிருக்கட்டும், இது உண்மையில் 10 + 40 + 90 = 140 . இது 40 + 100 ற்கு சமம். அடுத்ததாக 1 + 1+ 2 =4 . இது இப்பொழுது நூறின் இடம், ஆகவே ஒரு நூறு + ஒரு நூறு + இரண்டு நூறுகள். அதற்கு சமம் 400 . அவ்வளவுதான் விடை கிடைத்துவிட்டது. இது போண்ற முறைகளில் நீங்கள் தனியாகவே கூட்டல் கணக்குகளை செய்து பார்க்கலாம். நாம் மீண்டும் அடுத்த காணொளியில் சந்திக்கலாம்.