முக்கிய உள்ளடக்கம்
3 ஆம் நிலை
Course: 3 ஆம் நிலை > Unit 3
Lesson 4: 1000 -த்திற்குள் மறுகுழுவமைத்தலுடன் கூடிய கூட்டல்இட மதிப்பை பயன்படுத்தி 3 இலக்க எண்களை கூட்டல்: பகுதி 1
536+398 சேர்த்தல் மற்றும் மறுகுழுவமைத்தலைப் பயன்படுத்தும் முறையை கற்றுக்கொள்ளுதல். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இப்பொழுது மூன்று இலக்கு எண்களை எப்படி கூட்டுவது என்று கர்க்கபோகிறோம் 536ம் 398ம் கூட்டப்போகிறோம் முதலில் ஒன்றின் இடத்தில் கவனத்தை செலுத்துங்கள் 6ம் 8ம் கூட்டினால் என்ன கிடைக்கும்..? 14 அல்லவா.. அந்த 14ல் 4 ஒன்றின் இடத்தில் கிழே எழுதி ஒன்றை 10ன் இடத்தில் மேலே எழுதுவோம்.. இப்பொழுது 10ன் இடத்தில் கவனத்தை செலுத்துங்கள் 1யும்...3யும்...9யும்... கூட்டினால் என்ன கிடைக்கும் 13 அல்லவா.. அந்த 13ல் மூன்றை 10ன் இடத்தில் கிழே எழுதுவோம்.. ஒன்றை 100ன் இடத்தில் மேலே எழுதுவோம்.. நன்றாக கவனியுங்கள்.. 1..3..9..அதாவது 10..30..90.. இதை கூட்டினால் 130. இந்த 30ல் மூன்று பத்துகள் உள்ளது அல்லவா.. அந்த மூன்று பத்துகளில் உள்ள மூன்றை 10ன் இடத்தில் கிழே எழுதுகிறோம் 130ல் உள்ள ஒன்றை 100ன் இடத்தில் மேலே எழுதிகிறோம் இப்போது 100ன் இடத்தை கவனியுங்கள் 1..5.. 3.. இவற்றை கூட்டினால் என்ன கிடைக்கும் 9 அல்லவா.. அதாவது 9 நூறுகள் அந்த ஒன்பதை 100ன் இடத்தில் கீழே எழுதுகிறோம் நன்றாக கவனியுங்கள் ஒன்று என்பது 100 அல்லவா.. 5 என்பது 500 3 என்பது 300 100யும் 500யும் 300யும் கூட்டினால் 9 நூறுகள் அதாவது 900 கிடைக்கும் அந்த 9 நூறுகளில் உள்ள 9 தான் 100ன் இடத்தில் கிழே எழுதிகிறோம் அவளவுதான் விடை 934