If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

சமான பின்னங்களை உருவாக்குதல்

சால் பின்ன மாதிரிகளையும் எண்க்கோட்டினையும் சிறு பகுதிகளாக பிரிப்பதன் மூலம் சமான பின்னங்களை உருவாக்குகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

நாம் இப்போது சமபின்னங்களை உருவாக்குவது எப்படி என்பதை பார்க்கப்போகிறோம் 2/3 என்ற பின்னத்தை எடுத்துக்குவோமா..? இப்பொழுது இதற்க்கு சமமான பின்னத்தை கண்டுபிடிக்கப்போறோம் கண்டுபிடிக்கலாமா..? இதனை முதலில் படமாக வரைந்து பார்க்கலாம் ஒரு முழு வடிவத்தை மூன்று பாகமாக பிரிக்கிறேன் ஆஹா...மிக சரியாக பிரிச்சிட்டேன். இப்போ நம்மக்கிட்ட சமமா பிரிக்கப்பட்ட மூன்று பாகங்கள் இருக்கு சரியா... அதுல 2/3 என்பது 3 பாகத்துல 2 பாகத்த குறிக்கும் நாம அதுக்கு மட்டும் வேற நிறம் கொடுத்துக்கலாம் நிறம் கொடுக்காத பக்கம் 3ல் ஒரு பங்காகும். இந்த படத்தை நான் 2 பிரதி எடுத்துக்குறேன். 2வது படத்தில் கிடையாக ஒரு கோடு போடுறேன் அதாவது சமமாக பிரிக்கிறேன். இப்போ நம்மக்கிட்ட 6 பாகங்கள் இருக்கு அதுல வண்ணம் உள்ள பாகங்கள் எத்தனை 1,2,3,4 மொத பாகங்கள் 4/6 இதை எப்படி எழுதலாம் சரியாக சொன்னீங்க இது 3ல் 2பாகங்கள் கொண்ட பின்னத்துக்கு சமம் அடுத்த இடத்தில் இரு கிடைக்கொடுகள் போடப்போகிறேன் இப்போ படம் 9 சம பாகங்களா பிரிந்துள்ளது இதுல வண்ணம் தீட்டப்பட்டது... 1,2,3,4,5,6 6 பாகங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது அதாவது... சரியான பதில் 9ல் 6 இந்த பின்னம் முன்னால் சொன்ன பின்னக்களுடன் சமமானது இதை அப்படியே எண் கோட்டில் போடப்போறேன் 0 முதல் 1 வரை குறித்துக்கொள்கிறேன் அதில் 3 பாகத்தினை பிரிக்கிறேன் முதல் பாகம் 3ல் 1 என்ற பின்னமாகும். அடுத்த 2 பாகங்கள் 3ல் 2 என்ற பின்னம் அதே எண் கோட்டினை 6 பாகமாக பிரிக்கிறேன் அதில் 6ல் நான்கு என்ற பின்னம் சரியாக 2/3 என்ற பின்னத்தில் குறிக்கப்படுகிறது இல்லையா... சரி... இதே போல அந்த எண்கோட்டினை 9 பாகமாக பிரிக்கிறேன். எங்கே நீங்க சொல்லுங்க பார்ப்போம் 1,2,3,4,5,6 6வது பாகத்தில் குறித்தால் மீண்டும் அதே புள்ளியில் வருகிறது எனவே....சரி சரி இவை அனைத்தும் சம பின்னங்களே..