இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

வரிசைப்படி எண்ணுதல்

தவறின்றி எண்ணுவது எப்படி என்றுக் கற்றுக் கொள்ளவும்.

காணொலி எழுத்துப்படி

இப்போ நாம சில சுவாரஸ்யமான கணக்குகளதா பாக்க போறோம். இப்போ இங்க இருக்க பூக்கள எண்ணலாம். இந்த முதல் வாய்ப்புலள 1, 2, 3, அடடா... இத எண்ண மறந்துட்டாங்களே.. சரி, இதத் தாண்டிப் போனா 4, 5, 6, அட இங்கயும் ஒன்ன விட்டுட்டாங்களே.. அடுத்ததா, 7, 8 . ஆனா நாம இத இப்படி எண்ணக்கூடாது. இது தப்பான முறை. இதை 4, 5, 6, 7, 8, 9, 10 அப்படின்னு தா எண்ணனும். அப்போ முதல் வாய்ப்பு முற்றிலுமா தவறாயிருக்கு. அனேகமா இரண்டாம் வாய்ப்பு சரியா இருக்கும்னு நெனைக்குறேன். சரி, இப்போ எண்ணலாம். 1, 2, 3, 4 . பாத்திங்களா இங்க, எதுவுமே விடுபடல. 5, 6, 7, 8, 9, 10 . சரியா எண்ணிட்டோம் இதுதான் சரியான விடைனு நெனைக்குறேன். விடைய சரி பார்க்கலாம். ஆம்.. சரியான விடை. இப்போ இங்க இருக்கக்கூடிய சுண்டெலிய எண்ணப் போறோம். 1, 2, ஓ இது 2 இல்லயே 3 என இருக்கே. ஆனா இது 2வது எலியாச்சே, அப்படின்னா இது தவறுதான். சரி, இங்க இருக்குறத எண்ணுவோம். இத நீங்களே எண்ணுங்க பாப்போம். சரி, நா ஒரி முறை எண்ணிடுறேன், 1, 2, 3, 4, 5, 6, 7 . இதுதான் சரியான விடை. இங்கே என்னாச்சின்னா, 2 என இருக்க வேண்டிய இடத்தில் 3 என உள்ளது. அதனால இது முற்றிலுமா தவறு. சரி, இப்போ விடைய சரி பாக்கலாம். ம்ம்... சரியான விடைதான். இப்போ இந்த கணக்குல நாம விடுபட்ட எண்கள நிரப்பலாம். இந்த பெண்வண்டு பூச்சிகள எண்ணலாம். சரி, கீழ உள்ள கட்டங்கள்ல விடுபட்ட எண்களையும் எழுதப் போறோம். சரி, இது 1, 2, அப்புறம் 3, பிறகு 4, இப்போ விடைய சரிபாத்தா,... ஆம் சரியான விடை. இது ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு. சரி, அடுத்ததுக்கு போகலாம். இப்போ பூக்கள எண்ணி விடுபட்ட எண்ணை, கட்டத்துல எழுதலாம். இது முதல் பூ, அடுத்தது, 2 தானே வரனும். சரி, இது 2வது பூ. இப்போ விடைய சரி பார்த்தா, சரியான விடைதான். கடைசியா இன்னும் ஒரு கணக்க மட்டும் பாக்கலாம். இந்த பூக்கள திரும்பவும் நாம எண்ணலாம். மிது நம்மளோட முதல் கேள்வி போலயே இருக்கு. சரி, இதையும் எண்ணிடலாம். இங்க, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. இது சரியா இருக்கு. இப்போ அடுத்தது பார்க்கும் போது, இது நம்மலோட முதல் கணக்குல போல எண்கள் விடுபட்டு போயிருக்கு. அப்படின்னா முதல் விடை தான் சரியான விடை. விடைய சரி பார்த்தா, அதுவும் சரியாதா இருக்கு.