முக்கிய உள்ளடக்கம்
மழலையர் வகுப்பு
Course: மழலையர் வகுப்பு > Unit 1
Lesson 4: சிறிய எண்களை ஒப்பிடுகஎண் வரிசையில் உள்ள எண்களை ஒப்பிடுக
ரகு எண்கள் 10 ஐ விட சிறியதா அல்லது சமமானதா என்பதை அறிய எண் வரிசையை பயன்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நாம பார்க்கப்போறது, எண்கள் கணக்கு. இந்த கோட்டில், 6ஐ விட பெரிய எண்கள் எவை ? 6க்கு பிறகு இருக்குற, அனைத்தையும் எடுத்துக்கலாம். இந்த எண் கோட்டுல, 6 இங்க இருக்கு. மீதி எல்லாமே, 6ஐ விட, பெரிய எண்கள் தான். இந்த 4 எண்களை பார்ப்போம். நாம, வலது புறமாக, முன்னோக்கி செல்லும் போது, இந்த எண்கள், 6ஐ விட பெரியதாகிக்கொண்டே போகின்றன. 7 8 9 10 இங்கே 7 என்பது, 6ஐ விட பெரியது. 8ம், 6ஐ விட பெரிய எண். 9ம், 6ஐ விட பெரிய எண். அடுத்து 10. 6ஐ விட பெரிய எண். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 11, 12.. என்று.. எவ்வளவு தூரம் முன்னோக்கி போனாலும், அவை 6ஐ விட, பெரியவைதான். இங்கே இருப்பதில், 6ஐ விட பெரிய எண்கள் எவை ? 10 வலைபக்கமாக உள்ளது. ஆக, 10ஆனது, 6க்கு வலைபக்கத்தில் உள்ளது. 8ம் கூட, 6க்கு வலப்பக்கம் தான். ஆனால் 4, 6க்கு இடதுபுறத்தில் உள்ளது. 4, 6ஐ விட சிறிய எண். ஆகா 6ஐ விட சிறிய எண்கள் எவை? இங்கே உள்ள இந்த எண்கள் .. அதாவது, 6இக்கு இடப்புறம் உள்ள எண்களாகும். 9 நிச்சியமாக, 6ஐ விட குறைத்ததல்ல. அது நமக்கு, ஏற்கனவே தெரியும். ஆனால் 4, இங்கே கவனிக்க வேண்டியது, 4 ஆனது, 6க்கு இடப்புறமாக உள்ளது மேலும் 3ம் கூட, 6க்கு இடப்புறமாகத்தான் இருக்கிறது. ஆகவே, 4ம், 3ம், 6ஐ விட, குறைத்து சரியா ? ஆக, இயல்பாகவே யோசித்தால், நம்மிடம் 4அல்லது 3 பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். 6 பொருட்கள் வைத்து இருப்பவரை காட்டிலும், நம்மிடம், குறைவாக உள்ளது என்று தானே அர்த்தம்.? அது போலவே, நம்மிடம் 10 வாழைப்பழங்கள் இருந்தால், அப்பொழுது, 6 வாழைப்பழம் வைத்து இருப்பவரை விட, நம்மிடம், அதிக வாழைப்பழங்கள் உள்ளன.. சரிதானே?