முக்கிய உள்ளடக்கம்
மழலையர் வகுப்பு
Course: மழலையர் வகுப்பு > Unit 2
Lesson 4: ஒன்றாகச் சேர்த்தல், தனியாக பிரித்தல்10க்குள் கூட்டல் மற்றும் கழித்தல்
ரகு 10 அல்லது அதைவிட சிறிய எண்கள் கொண்ட கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு விடை காண்கிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இப்ப நாம இங்க 4 சமன்பாடுகள பாக்குறோம். ஒவ்வொன்லயுமே வெற்றிடம் ஒன்னு இருக்குது அந்த வெற்றிடங்கள்ல விடுபட்ட எண்கள தா நாம இப்போ நிரப்ப போறோம். சரி, இத நாம ஒவ்வொன்னா செய்வோம் இடது பக்கம் இருக்கக் கூடிய இந்த முதல் சமன் பாட்டுல 1 + 4 னு இருக்குது 1 + 4 என்பது, 5 . இது நமக்கு தெரிஞ்சதுதான் இப்போ 4 உடன் 1 கூட்டினால் நமக்கு 5 கிடைக்குது அப்போ இது முடிஞ்சிடுச்சி ஏன்னா ? 1 +4 என்பது 5ற்கு சமம் இங்க 4 கூட்டல் ஏதோ ஒன்னு அப்படின்னு சொல்லப் பட்டிருக்கு இது கூட 5 என்பதை போலதான் இது 1 + 4 இல்லை னா 4 + 1 இதுவும் 5 தான் ஆக 4 + 1 என்பது 5 . நம்மக்கிட்ட இருக்கக் கூடிய சமன்பாடு , 4 + 1 என்பது 5 ஆகும் சமன் அப்படின்னா இடது பக்கம் இருப்பதயே குறிக்குது இடது பக்கத்துக்கு சமமா வலது பக்கம் இருக்கு. இப்போ இங்க வெற்றிடம் + 2 , 5 ற்கு சமம் னு சொல்லப்படுது எது கூட்டல் 2 , 5 ற்கு சமம் ? ஆம், 3 + 2 = 5 . இல்லைன்னா 5 என்பது, 3 + 2 . சரி, இப்போ அடுத்தத பாக்கலாம். இங்க 3 + வெற்றிடம் 5 ற்கு சமம் னு இருக்கு . இது நாம முன்னாடியே பாத்ததுதான், ஏன்னா ? 3 + 2 தா 5 ற்கு சமம் . 3 + 2 என்பது 5 னு எழுதிப்போம். இது உங்களுக்கு புரியுனு நம்புறேன். இப்போ நாம அடுத்த சில கணக்குகளை பார்க்கலாம். 9 - 3 எதற்கு சமம் ? இப்போ நம்மகிட்ட 9 பொருட்கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். அதிலிருந்து நாம 3 பொருளை எடுத்துவிட்டால் மீதமாக 6 பொருட்கள் இருக்கும் 9 - 3 என்பது 6 . அடுத்தது 10 கழித்தல் வெற்றிடம் என்பது 6க்கு சமம்னு கொடுக்கப்பட்டிருக்கு இப்ப நம்மகிட்ட 6 தா மீதம் இருக்கனும் அப்படின்னா, 10லிருந்து எத்தனை பொருட்களை எடுக்க வேண்டும். ஆம்... 10லிருந்து 4 பொருட்களை எடுத்து விட்டால் 6 கிடைக்கும். அடுத்தது, வெற்றிடம் கழித்தல் 1 என்பது 6 க்கு சமம் 7 - 1 என்பது 6ற்கு சமம் . இத நாம பார்த்த உடனே சொல்லிட முடியும் . அடுத்தது 8 கழித்தல் வெற்றிடம் என்பது 6க்கு சமம் அப்போ 8லிருந்து எத்தனையை கழித்தால் 6 கிடைக்கும். 8 லிருந்து 1ஐ கழித்தால் நமக்கு 7 தா கிடைக்கும் . அப்போ 8 லிருந்து 2 ஐ கழித்தால் ? ஆம்,.. 8 லிருந்து 2 ஐ கழித்தால் 6 கிடைக்கும் . எனவே, 8 - 2 = 6 . அவ்வளவுதா, நாம எல்லா கணக்கையும் முடிச்சிட்டோம் .