இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

கூட்டுதல் மற்றும் கழித்தல் : பழத் துண்டுகள்

ரகு பழங்களை கூட்டுகிறார் மற்றும் பழங்களை கழிக்கிறார். எடுத்துக்காட்டாக, 5+3 மற்றும் 5-3 இவற்றை அவர் பயன்படுத்துகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இங்கே 1, 2, 3, 4, 5, நாவல் பழங்களும், 1, 2, 3 செரிப் பழங்களும் உள்ளன. மொத்தம் எத்தனை பழங்கள் என்பதை அறிய என்ன செய்வது ? 5 உடன் 3 ஐ கூட்டுவதா ? அல்லது 5 ல் 3 ஐ கழிப்பதா ? என்ன செய்தால் மொத்த எண்ணிக்கை தெரியும் ? என்ன செய்வதென்று நிதானமாக யோசித்து பார்ப்போம் . 5 நாவல் பழங்களுடன் 3 செரியை சேர்க்கும் போது எண்ணிக்கை அதிகமாகும். 5 உடன் 3 ஐ கூட்டினால் கிடைக்கும் விடை என்ன ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 . மொத்தம் 8 பழங்கள் உள்ளன. இப்பொழுது 5 ல் 3 ஐ கழித்தால் கிடைப்பது என்ன ? இங்கே இருப்பது 5 நாவல் பழங்கள் 5 ல் 3 ஐ எடுத்து விட்டால் 1, 2, 3, இப்பொழுது மீதி எத்தனை ? மீதமுள்ள பழங்களின் எண்ணிக்கை 2 . மொத்த எண்ணிக்கையை அறிய கூட்ட வேண்டும் . 5 ல் 3 ஐ எடுக்கும் போது மீதமிருப்பதை அறிய கழிக்க வேண்டும்.