If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

நேரத்தினை கூறுதல் (முகப்புக் கடிகாரம்)

சால் முகப்பு ஒப்புமைக் கடிகாரத்தில் நேரத்தினைக் கூறுகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

உங்களுக்கு கடிகாரத்துல மணி பாக்க தெரியுமா.. தெரியாதா..சரி.. நாம இந்த காணொலில கடிகாரத்துல எப்படி மணி பாக்குறதுன்னு கத்துக்கலாம்.. நாம இங்க தெரிஞ்சிக வேண்டியது கடிகாரத்துல இரண்டு முள்ளு இருக்கும். ஒன்னு சின்ன முள்ளு இனொன்னு பெரிய முள்ளு.. சின்ன முள்ள.. மணிமுள் அப்படின்னு சொல்லுவாங்க ஏன்னா அது மணிய காட்டுறதுனால.. இப்போ கொடுத்திருக்குற இந்த கடிகாரத்துல சின்ன முள்ளு எத நோக்கி நிக்குதுன்னு பாக்கணும் அது சரியா 7அ நோக்கி நிக்குது.. அதாவது நாம இப்போ சரியா 7 மணி நேரத்த கடந்திருக்கோம்னு அர்த்தம் அதாவது இப்போ மணி 7 அப்புறம் நீளமா இருக்குற பெரிய முள்ளு அதாவது நிமிஷ முள்ள பாக்கலாம் இந்த நிமிஷ முள்ளு சரியா 12க்கு நேரா இருக்குது. அப்போ எவ்வளுவு நிமிஷம்னு பாத்தா அது பூஜ்யம் நிமிஷம் தான்.. ஒவ்வொரு எண்ணும் இந்த கடிகாரத்துல இருக்குற ஒவ்வொரு எண்ணும்.. 5 நிமிஷத்த குறிக்குது.. அதனால மணி இப்போ சரியா 7 மணி.. இப்போ நாம விடைய சரி பாக்கலாம்.. மணி முள்ளு எங்க இருக்கு..? மணி முள்ளு 7அ கொஞ்சம் தள்ளி..8 பக்கத்துல இருக்குது.. இருந்தாலும் அந்த முள்ளு 8அ இன்னும் தொடல.. நாம இன்னும் 7 மணில தான் இருக்கோம்.. கடிகாரத்தோட இரண்டு முள்ளும் எப்போவுமே வலது பக்கம்தான் சுத்தும்.. நாம 7அ தாண்டினாலும் இன்னும் 8அ தொடமதான் இருக்கோம்.. அப்படின்னா மணி 7.. ஆனா 7 மணின்னு கண்டுபிடிச்சாச்சு எவ்வளவு நிமிஷம்னு கண்டுபிடிக்கணுமே.. அதுக்கு என்ன பண்ணனும்னா கடிகாரத்தோட உச்சில தொடங்கணும்.. அதாவது 12ல தொடங்கணும் 12ல தொடங்கி நிமிஷ முள்ளு இருக்குற இடம் வரைக்கும் 5, 5அ கூட்டிக்கிட்டே வரணும் சரி இப்போ நாம அத எண்ணலாமா 0 , 5 , 10 15 , 20 , 25 30 , 35 , 40 45 நாம இப்போ 7 மணிய தாண்டி 45 நிமிஷத்துல இருக்கோம்.. அப்படின்னா இப்போ மணி என்ன..? எங்க நீங்களே சொல்லுங்க பாக்கலாம் ம்ம்ம்.. சரியா சொநிங்க இப்போ மணி 7.45 என்ன இப்போ உங்களுக்கு கடிகாரத்துல மணி பாக்கத்தேரிஞ்சிடுச்சா.. சரி இதே மாதிரி இன்னும் சில கணக்க செஞ்சி பாக்கலாம் அப்போ தான் நமக்கு தெளிவா புரியும்.. இந்த கணக்குல மணி முள்ளு எங்க இருக்கு மணி முள்ளு ஒண்ணுக்கும் இரண்டுக்கும் நடுவுல இருக்கு.. ஆனா அது வலது பக்கமா சுத்துரதுனால அது ஒன்ன மட்டும்தான் தாண்டி இருக்கு.. அப்போ நாம இன்னும் முதல் மணில தான் இருக்கோம்.. அப்படின்னா மணி இப்போ ஒன்னு.. ஆனா எத்தனை நிமிஷங்கள் இத கண்டுபிடிக்க நாம பூஜியத்துல இருந்து 5ஆல எண்ணலாம் எங்க நீங்களே எண்ணுங்க பாக்கலாம் சுழிஎண்.., 5 , 10 , 15 20 , 25 , 30 35 , 40 , 45 ம்ம்ம்.. சரியா எண்ணிடீங்க அப்படின்னா இப்போ மணி 1.45 கடைசியா இன்னொரு கேழ்விய செஞ்சிடலாம்.. அப்போதான் நம்ம மனசுல நல்லா பதியும்.. இங்க மணி முள்ளு ஒண்ணுக்கும் இரண்டுக்கும் நடுவுல இருக்குது.. அது ஒன்ன தாண்டி இருக்கு ஆனா 2அ இன்னும் தொடல.. அப்படின்னா நாம இன்னும் முதல் மணிலதான் இருக்கோம்.. ஆனா நிமிஷம் என்னனு நமக்கு தெரியாது.. நாம 12ல இருந்து எண்ணதுடங்கலாம் 0 , 5 , 10 15 இப்போ மணி 1.15 அடுத்ததா நமக்கு இன்னொரு நேரக்கணக்கு இங்க மணி முள்ளு சரியா 2அ காட்டுது.. நம்மக்கிட்ட நிமிஷ முள்ளு 12ல இருக்கு அப்படின்னா இது சரியா 2 மணி அப்படின்னு அர்த்தம்.. என்ன நான் சொன்னது புரிஞ்சிதுல என்ன இனிமே கடிகாரத்த பாத்து சரியா மணிய சொல்லிடுவிங்க இல்லையா.. அப்படின்னா அம்மா அப்பா கிட்டபோயி கடிகாரம் வங்கிகொடுங்கன்னு சொல்லி அடம்பிடிக்ககூடாது கண்ணுங்களா...