முக்கிய உள்ளடக்கம்
2-ஆம் நிலை
பட்டை வரைபடம் உருவாக்குதல்
சால் ஒரு கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்தி ஒரு பட்டை விளக்கப்படத்தை உருவாக்குகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இதோ இங்க இருக்குற தகவல்கள் அடிப்படையில எப்படி செவ்வகம் வரைபடம் வரையனும்ன்னு கத்துக்க போறம் இங்க என்ன கொடுத்து இருகாங்க அப்படினா 7 ஆசிரியர்களுக்கு மொழி பாடம்தான் ரொம்ப பிடிச்சிருக்காம் 3 ஆசிரியர்களுக்கு வரலாறு பாடம் பிடிச்சிருக்கு அதே போல 9 ஆசிரியர்களுக்கு வடிவியல் பாடம் பிடிச்சிருக்கு ஒரே ஒருத்தருக்கு தான் வேதியல் பாடம் பிடிச்சிருக்கு ஆனா இந்த இயற்பியல் பாடம் இருக்கு இல்ல இத யாருக்கும்மே பிடிக்களியாம் இப்போ இந்த தகவல்கள் இருக்கு இல்லையா இதை எப்படி வரைபடத்துல குறிக்குறது அப்படின்னு பார்க்கலாமா இதோ இங்க இருக்குற இந்த வரைபடத்துல x அச்சில பாடங்களையும் y அச்சில எண்ணிக்கையும் குறிச்சிருக்காங்க இப்போ ஒவ்வொரு பாடத்தையும் எத்தன பெரு விரும்புனாங்க அப்படிங்குறத மேலே இருக்குற தகவல்கள் அடிபடையில நாம்ப இப்போ குறிக்க போறோம் இயற்பியல் பாடத்த எத்தன பெரு விரும்புனாங்க யாருமே விரும்புல இல்லையா அதனால இயற்பியல் பாடத்துல 0 குறிக்கலாம் வேதியல் பாடத்த ஒருத்தர் மட்டும் தான் விரும்புராறு இல்லையா அதனால ..... வேதியல் பாடத்துக்கு பக்கத்துல 1 வரைக்கும் கட்டத்த வரைஞ்சிக்கலாம் சரியா அதே மாதிரி 9 பேர் வடிவியல் பாடத்த விரும்புறாங்கன்னு சொல்லி இருக்காங்க அதனால வடிவியல் பாடத்துக்கு நேரா 9 வரைக்கும் கட்டத்த நிட்டிக்கலாம் வரலாறு பாடத்த 3 விரும்புறாங்க அதனால வரலாறுக்கு நேரா 3 எண் வரைக்கும் கட்டத்த வரைஞ்சிக்கலாம் 7 பேருக்கு மொழிப்பாடம் விருப்பமா இருக்கு அப்போ மொழிப்பாடத்துக்கு நேரா 7 வரைக்கம் கட்டத்த வரைஞ்சிக்கலாம் ஆகா ......... இங்க பாருங்களேன் வரைப்படம் எவ்வளவு அழகா வந்துருக்குன்னு இதிலிருந்து எளிமையா தகவல்கள புரிஞ்சிக்க முடியுது இல்லையா இப்படி தான் நமக்கு தரப்பட்ட தகவல்கள வச்சி செவ்வக வரைபடத்த வரையனும்