If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

வட்டங்கள் மற்றும் செவ்வகங்களின் சம பகுதிகள்

வடிவங்களை 2 அல்லது 4 சம பகுதிகளாக பிரித்தால் என்னவாகும் என்பதை சால் வரையறுக்கிறார்.

காணொலி எழுத்துப்படி

நாம இந்த காணொளில வட்டத்தையும் செவ்வகத்தையும் எப்படி சம பகுதிகளா பிரிக்கலாம்னு பாக்க போறோம்னு பாக்க போறோம். சரி, இப்போ கணக்குக்கு போவோமா ? கீழ கொடுக்கபட்டிருக்க வட்டத்துல, எத்தனவட்டம் 4சமபகுதிகள் கொண்டிருக்கு அப்படின்னு கண்டுபிடிப்போம். இப்போ இந்த 4 வட்டங்களுமே, 4 பகுதிகளத்தா கொண்டிருக்குது. ஆனா இந்த 4 பகுதியும், சம பகுதியா அப்படின்னுதா முக்கியமா பாக்கனும். இப்போ முதலில் நாம் இந்த வட்டத்தை எடுக்கலாம். இதுல 4 பகுதிகள் இருக்குது. இப்போ இந்த 4 பகுதிகளும் சமமா இருக்கனு பாப்போம். இந்த 3வது பகுதி கடைசி பகுதிய விட பெரிதாஅ இருக்கு, அதேபோல இந்த 2வது பகுதி பகுதிகடைசி பகுதிய விட பெரிதா இருக்கு. அப்போ இந்த வட்டத்துல இருக்க 4 பகுதிகளும், சமமா இல்ல. அடுத்து இந்த 3 வட்டத்தையும் எடுத்துக்கலாம். இந்த 3 வட்டத்துல இருகக்கூடிய 4 பகுதியும் சமமா இருக்கனு பாக்கனும். இந்த வட்டத்துல இருக்க 4 பகுதிகளும், சமமா இருக்கு, அடுத்து இந்த வட்டத்துல இருக்க 4 பகுதிகளும், சமமா இருக்கு, கடைசியா, இந்த வட்டத்துல இருக்கக்கூடிய 4 பகுதிகளும், சமமா இருக்கு, அப்பன்னா, இந்த 3 வட்டமும் 4 சம பகுதிகள கொண்டிருக்கு. ஆனா இந்த வட்டத்துல 4 பகுதிகளும், சமமா இல்ல. அப்படினா நம்மலோட விட சரியா தா இருக்கு. இப்போ நாம அடுத்தக் கணக்குக்கு போகலாம். இங்க கீழ கொடுக்கப்பட்டிருக்க சதுரத்துல எத்தன சதுரம் 4 சம பகுதிகள கொண்டிருக்குனு கண்டபிடிக்க போறோம். இந்த 4 சதுரமும் சதுரமும்4 பகுதிகள கொண்டிருக்கு. ஆனா நாம இந்த 4 சதுரத்துல இருக்கக் கூடிய 4 பகுதியையும் சம பகுதிகளானு பாக்கனும். முதல்ல நாம இந்த சதுரத்த எடுத்துக்குவோம். இதுல 4 பகுதிகள் இருக்கு. இந்த 4 பகுதிகலும் சமமா இருக்கானு பாக்கலாம். சரி, இந்த பகுதி கடைசி பகுதிய விட பெரியதா இருக்கு. அப்போ இந்த சதுரத்துல இருக்கக்கூடிய 4 பகுதியும், சமமா இல்லனு அர்ததம். அடுத்து, இந்த சதுரத்த பாருங்களேன். இதுல 4 பகுதிகளும் சமமா இருக்கு, அப்போ இந்த சதுரத்த நாம குறிச்சிக்கலாம் அடுத்து இங்க சின்ன சின்ன சதுரமா, 4 பகுதிகளும் சமமா இருக்குது. அப்போ இந்த சதுரத்தையும் குறிச்சிக்குவோம். அடுத்து இந்த சதுரம் சின்ன சின்ன செவ்வகமா, 4 பக்கமும் சமமா இருக்கு. அப்போ இந்த சதுரத்தையுன் நாம குறிச்சிக்கலாம். விடைய சரி பாத்தா, சரியா தா இருக்கு. இப்போ, இங்க கொடுக்கப்பட்டிருக்க வட்டத்துல, எத்தனை வட்டம் 3 சமபகுதிகள கொண்டிருக்குனுபாக்க போரோம். முதல்ல நாம இந்த வட்டத்தை பாக்கலாம். இதுல 4 பகுதிகள் இருக்குது. ஆனா நமக்கு 3 பகுதிகள் தான் வேனும். சரி, அடுத்த வட்டத்துக்கு போகலாம். இந்த வட்டம் 3 பகுதிகள கொண்டிருக்குது. ஆனா, இந்த கடைசி பகுதி நடு பகுதிய விட சின்னதா இருக்கே. இப்போ அடுத்த வட்டத்த பாருங்க. இந்த வட்டத்துல இருக்கக் கூடிய 3 பகுதிகளும் சமமா இருக்கு. அப்போ இந்த வட்டத்த நாம குறிச்சிக்குவோம். அடுத்தது இந்த வட்டம் 3 பகுதிகள கொண்டிருக்குது. ஆனா இந்த கடைசி பகுதி நடு பகுதிய விட சின்னதா இருக்குது. அப்போ இந்த 4 வடத்துல இந்த ஒரு வட்டம் மட்டும்தா, 3 சம பகுதிய கொண்டிருக்கு. விடைய சரி பார்த்தா சரியான விடைதான். இங்க கீழ கொடுக்கப்பட்டிருக்க வட்டத்துல எத்தனை வட்டம் 3 சம பகுதிகள கொண்டிருக்குனு பாக்கப் போறோம். இதுக்கு முன்னாடி நாம பத்த கணக்குல என்ன செஞ்சமோ அதையேதா இங்கயும் பண்ணபோறோம். இந்த வட்டம் 4 பகுதியா இருக்குது. இந்த 2 வட்டமுன் 3 பகுதியா இருக்குது. ஆனா சமமா இல்ல. அடுத்தது இந்த வட்டம் 3 பகுதிகளையும் சமமா கொண்டிருக்குது. அப்போ நாம இந்த வட்டத்த குறிச்சிக்கலாம். விடைய பாத்தா, சரியா தா இருக்குது. இப்போ இந்த செவ்வகத்துல எத்தனை செவ்வகங்கள் 4 சம பகுதிகள கொண்டிருக்குனு பாக்க போறோம் இந்த செவ்வகத்துல இருக்கக்கூடிய 4 பகுதிகளும் சமமா இருக்கு. அப்போ இத நாம குறிச்சிக்குவோம். அடுத்து இந்த செவ்வகம் 2 சம பகுதிகள தான் கொண்டிருக்கு. அதாவது 2 பாதியா தான் பிரிக்க பட்டிருக்கு. அடுத்து இந்த செவ்வகம் 4 சம பகுதிகள கொண்டிருக்கு. அப்போ நாம இந்த செவ்வகத்தையும் குறிச்சிக்குவோம். அடுத்து இந்த செவ்வகம் 6 சம பகுதிகள கொண்டிருக்கு. அப்போ, இந்த 4 செவ்வகத்துல இந்த 2 செவ்வகம் மட்டும்தா 4 சம பகுதிகள கொண்டிருக்குது. இந்த விடையும் சரியா தா இருக்குது. சரி, மருபடியும் நாம வேறொரு காணொளில சந்திப்போம்.