If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

1, 10, அல்லது 100 ஐ கழித்தல்

சால் ஒரு எண்ணிலிருந்து 1, 10, அல்லது 100 ஐ கழிக்கிறார்.

காணொலி எழுத்துப்படி

நாம் இப்போ பார்க்கப்போவது, 100 மற்றும் 10ன் கழித்தல் கணக்கு. நம்மிடம் 324 என்ற எண் இருக்கிறது. அதாவது, 100ன் இடத்தில் 3, 10ன் இடத்தில் 2, 1ன் இடத்தில் 4, என சொல்லலாம். அதை இப்படியே படமாக வரைந்தால், 3 நுறுகள், 1 2 3 இரண்டு 10கள்., 1 2 நான்கு ஒன்றுகள், 1 2 3 4 மொத்தம் 324 பெட்டிகளை வரைந்து விட்டோம். இதில் இருந்து சில எண்களை கழிக்க போகிறோம். முதலில் ஒரு பத்தினை கழிக்கிறேன், அதாவது, ஒரு பத்து, பூஜியம் ஒன்றுகள், கவனமாக பாருங்கள். இங்கே, நான் 100கள் எதையும் கழிக்கவில்லை ஒரு 10, பூஜியம் ஒன்றினை மட்டும் கழிக்கிறேன்., அதாவது, ஒன்றுகளையும் நான் கழிக்கவே இல்லை. இப்பொது என்ன விடை கிடைக்கும் ? செய்து பார்ப்போம். 100கள் மாறாது. ஏன் என்றால், நாம் 100களை கழிக்கவே இல்லை. எனவே, அதை மாற்றாமல், அப்படியே 300கள் என எழுத வேண்டும். அடுத்தது இரண்டு பத்துகள். அதில், ஒரு பத்தினை கழிக்க போகிறோம். 2 கழித்தல் 1, என்ன கிடைக்கும் ? உம்.. அந்த ஒன்றினை இங்கே எழுத வேண்டும். இந்த படத்தில் ஒரு பத்தினை எடுத்து விடுகிறேன், அடுத்து 4 ஒன்றுகள், அதை நாம், ஒன்றுமே செய்யவில்லை, ஏன் என்றால், 4 ஒன்றுகள், கழித்தல் பூஜியம் ஒன்றுகள், 4 ஒன்றுகளுக்கு சமம். இப்போது என்ன விடை நமக்கு கிடைத்துள்ளது ? ஆம்.. 314 அதாவது, 3 நுறுகள், ஒரு 10, 4 ஒன்றுகள், இதே போல, இன்னொரு கணக்கை பார்க்கலாமா ? இப்போது 10க்கு பதிலாக, 100களை கழிக்க போகிறோம். அதாவது, ஒரே ஒரு 100, பூஜியம் பத்துகள், பூஜியம் ஒன்றுகள். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாமா ? 3 நூறுகள், அதில் இருந்து, ஒரு நூறினை எடுத்தால், மிச்சம், 2 நுறுகள். பின் பத்துகளையும், ஒன்றுகளையும், நான் ஒன்றும் செய்யவில்லை அதை அப்படியே எழுதுகிறேன், அதாவது, 2 பத்துகள், 4 ஒன்றுகள், அதை அப்படியே எழுதுகிறேன், இப்பொது என்ன விடை நமக்கு கிடைக்கிறது? உம்.. 224 அதாவது, 2 நுறுகள், 2 பத்துகள், 4 ஒன்றுகள் இப்போ, நான் என்ன செய்யுறேன்னு படத்தில பாருங்க. இந்த 3 நுறுகள்ல, ஒரு நுறினை எடுத்து விட்டேன். பத்துகளையும், ஒன்றுகளையும் நான் எதுவுமே செய்யவில்லை. எனவே, நமக்கு கிடைத்த விடை, 224 அதாவது, 2 நுறுகள், 2 பத்துகள், 4 ஒன்றுகள் அவ்வளவுதான். கழித்தல் கணக்கும் மிகவும் சுலபமானது தானே..?