If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

1கள், 10கள், மற்றும் 100களைக் கூட்டுதல்

சால் ஒன்றுகள், பத்துகள், மற்றும் நூறுகளை கூட்டுவதன் மூலம் 3 இலக்க எண்களைக் கூட்டுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இது ஒரு எளிதான கணக்குதான்.இங்கே 163 என்ற எண் உள்ளது. இங்கே 100ன் இடத்தில் ஒரு 100ம், 10ன் இடத்தில் 6 பத்துகளும் உள்ளன. ஒன்றின் இடத்தில் 3 ஒன்றுகளும் உள்ளன. இங்கே 163 சதுரக் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. 1 நூறு, 6 பத்துகள், 3 ஒன்றுகள் . இது 163 . அதாவது 1 நூறு + 6 பத்துகள் + 3 ஒன்றுகள். மொத்தம் 163 கட்டங்கள். 1 நூறு, 6 பத்துகள், 3 ஒன்றுகள் இப்பொழுது 163 உடன் 324 ஐ கூட்டுவோம். 324 என்பது 3 நூறுகள், 2 பத்துகள், 4 ஒன்றுகள் அதை இங்கே சதுரங்க கட்டங்களாக வரைந்துள்ளோம். மொத்தம் 324 சதுரங்க கட்டங்கள் . 3 நூறுகள், 2 பத்துகள், 4 ஒன்றுகள் 324 என்பது 3 நூறுகள், 2 பத்துகள், 4 ஒன்றுகள் இப்போது இந்த சதுரங்க கட்டங்களை எண்ணுவோம். 3 தொகுதிகளாக 3 நூறுகள் உள்ளன. 2 தொகுதிகளாக 2 பத்துகள் உள்ளன. 4 தொகுதிகளாக 4 ஒன்றிகள் உள்ளன. இவற்றை இப்போது ஒன்றாக கூட்டுவோம். முதலில் 1ன் இடம் . 3 ஒன்றுகள் + 4 ஒன்றுகள் = 7 ஒன்றுகள். 1ன் இடத்தில் 7 என எழுதிக்கொள்வோம். அடுத்ததாக 10ன் இடம். 6 பத்துகள் + 2 பத்துகள் = 8 பத்துகள் . 6 பத்துகள் + 2 பத்துகள் = 8 பத்துகள் . நிறைவாக நூறின் இடம். 1 நூறு + 3 நூறுகள் = 4 நூறுகள். 1, 2, 3, 4 . 4 நூறுகள். 100 + 300 = 400 . 163 + 324 = 487 . 4 நூறுகள், 8 பத்துகள் , 7 ஒன்றுகள் இதுதான் நமது விடை .