முக்கிய உள்ளடக்கம்
2-ஆம் நிலை
Course: 2-ஆம் நிலை > Unit 2
Lesson 5: 2 இலக்க எண்களுக்குள் கழித்தல் அறிமுகம்- மறுகுழுவமைத்தலின்றி இரண்டு இலக்க எண்களின் கழித்தல் 1
- மறுகுழுவமைத்தலின்றி இரண்டு இலக்க எண்களின் கழித்தல் (எடுத்துக்காட்டு 2)
- 2-இலக்க எண்களை கழித்தல் (மறுகுழுவமைத்தல் இன்றி )
- மறுகுழுவமைத்தலுடன் 1 இலக்க எண்களைக் கழித்தல்
- மறுகுழுவமைத்தலுடன் 1 இலக்க எண்களைக் கழி
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
மறுகுழுவமைத்தலுடன் 1 இலக்க எண்களைக் கழித்தல்
சால் 35 - 8 ஐ கழிக்கிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இங்க இருக்கக்கூடிய 35 என்ற எண்ணில் 3 என்பது பத்தின் இட மதிப்பு. 5 என்பது 5 ஒன்றுகள். இது 8 ஒன்றுகள் இடத்த குறிக்குது. இது 5ன் இட மதிப்ப காட்டுது. 5 ஒன்றுகள். இதேபோல 35 என்பது 3 பத்துகள் 5 ஒன்றுகள். இப்போ 35 லிருந்து 8 ஐ கழிக்கனும். அத எப்படி செய்றதுனு கொஞ்சம் யொசிசி பாக்கலாமா ? இங்க நம்மகிட்ட 5 ஒன்றுகள மட்டும் தா இருக்கு. ஆனா அதுல இருந்து எப்படி 8 ஒன்றுகள கழிக்க முடியும் ? 5லிருந்து 8 ஐ கழிக்க முடியாது. அப்போ எப்படி தா 8 ஐ கழிப்பது ? அத்ற்கு ஒரு வழி இருக்கு. மதிப்புகள இட மாற்றுதல் மூலமா கழிக்க முடியும். இட மாற்றுதல் என்பதை மறு குழு அமைத்தல் அப்படின்னும் சொல்லலாம். ஆனா நம்மகிட்ட இருப்பது 5 சதுர கட்டங்கள் தான். நாம அத மட்டும் பாக்கக் கூடாது நம்மகிட்ட 35 சதுர கட்டங்கள் இருக்குனு பாக்கனும். 10 சதுர கட்டங்களா 3 குழுக்கள் இருக்கு. 5 ஒன்றுகள் இருக்கு. 10ன் இட மதிப்பிலிருந்து ஒரு குழுவுல இருக்கக் கூடிய 10 சதுர கட்டங்கள இடமாற்றி, ஒன்றுகளோட சேர்க்கபோறோம். இப்போ 5 ஒன்றுகளோட மேலும் ஒரு 10 ஒன்றுகள். இப்போ அத நா சேர்க்க போறேன். 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 . இப்போ இது உங்களுக்கு இது புரியுதா ? 3 பத்துகள்ல இருந்து ஒரு 10 ஐ நீக்கியாச்சி. மீதம் இருப்பது 2 பத்துகள். நமம்கிட்ட இருக்க 10 ஒன்றுகள் ஏற்கனவே உள்ள 5 ஒன்றுகளோட சேர்ந்துடுச்சி. அப்போ 5 + 10 = 15 ஒன்றுகள். இப்போ நம்மகிட்ட 15 இருக்கு. இதிலிருந்து 8 ஐ கழிக்கலாம். ஏன்னா 15 என்பது 8ஐ விட பெரியது. சரி, இப்போ நாம 8 ஐ கழிக்கலாம். 1, 2, 3, 4, 5, 6, 7, 8 . இப்போ நாம 8 ஒன்றுகள நீக்கிட்டோம். 3 பத்துகளிலிருந்து ஒரு 10 ஐ நீக்கினால் மீதம் 2 பத்துகள் இருக்கும். எத்தனை ஒன்றுகள்னு பாக்கலாமா ? 1, 2, 3, 4, 5, 6, 7 . 7 ஒன்றுகள் இருக்கு. அதாவது ஒன்றுகள் இடத்துல 7 போடனும். உங்களுக்கு மறுபடியும் புரிஞ்சிக்குறதுக்கு, நா இங்க நடந்ததை மீண்டும் ஒரு முறை சொல்றேன். 3 பத்துகள் 5 ஒன்றுகள் இருந்துச்சி. இதுல இருக்கக் கூடிய ஒரு 10ஐ ஒன்றுகளா மாத்தி 5 ஒன்றுகளோட இணைச்சோம். மீதமா இருந்தது 2 பத்துகள தா, 5 ஒன்றுகளானது 15 ஒன்றுகளா மாறியது, இப்போ நாம 15 லிருந்து 8ஐ கழித்தோம். மீதம் நம்மகிட்ட 7 ஒன்றுகள் இருந்துச்சி. 3 பத்துகள்ல இருந்து ஒரு 10 நீக்கினால், மீதமா 2 பத்துகள் இருந்துச்சி. ஏற்கனவே இருக்கக் கூடிய 2 பத்துகள், இப்போ புதுசா வந்த 7 ஒன்றுகள். அப்படின்னா நம்மளோட விடை 27 . என்ன இட மாற்ற கழித்தல் புரிஞ்சிதா ? உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.