இந்தத் தகவலை நீங்கள் காண்கிறீர்கள் என்றால், எமது தளத்தில் வெளி தகவல்களை காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அர்த்தமாகும்.

If you're behind a web filter, please make sure that the domains *.kastatic.org and *.kasandbox.org are unblocked.

முக்கிய உள்ளடக்கம்

10-களாக எண்ணுதல்

சால் 10-களாகக் எண்ணுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இந்த காணொளில நாம 40 லிருந்து தொடங்கி பத்து பத்தா எண்ணிக்கைய கூட்டிகிட்டே போக போறோம். இந்த காலியான கட்டங்கள நிரப்புவோம் . இப்போ 40 லிருந்து தொடங்கலாமா ? இங்க, 40என்பதில் 4 பத்துகள் இருக்கு, அதோட மேலும் ஒரு பத்தைக் கூட்டினால், நமக்கு 5 பத்துகள் ஆகிவிடும். அப்போ 50 என்று விடை கிடைக்கும் . இப்போ இதோட ஒரு 10ஐ கூட்டினால், நமக்கு 6 பத்துகள் கிடைக்கும். அதாவது 60 கிடைக்கும். இதுல மேலும் ஒரு 10ஐ சேர்த்தால் நமக்கு 7 பத்துகள் கிடைக்கும். அப்போ 70 ஆகும். ஆனா, நாம இங்க 70 என்று எழுத தேவையில்ல, அவர்களே 70 என்று கொடுத்து இருக்காங்க. இப்போ 70 இருக்கு . அது கூட ஒரு 10 சேர்த்தால் நமக்கு 8 பத்துகள் அதாவது 80 கிடைக்கும் . இப்போ அது கூட ஒரு 10 சேர்த்தால் நமக்கு 9 பத்துகள் அதாவது 90 கிடைக்கும் . அவ்வளவுதான் கட்டங்கள நிரப்பியாச்சி. இதே மாதிரி இன்னொரு கணக்க செய்யலாமா ? இந்த கணக்குல, 656 லிருந்து , பத்து பத்தாக கூட்ட போறோம் . வழக்கம்போல இங்க இருக்குற காலியான கட்டங்கள தா நிரப்ப போறோம் . சரி, ஒவ்வொரு முறையும் 10ஐ கூட்டலாம் . இதுல 6 நூறுகளூம், 5 பத்துகளும் , 6 ஒன்றுகளூம் இருக்கு . இது கூட இன்னொரு 10ஐ கூட்டலாமா ? இப்போ ஏற்கனவே இங்க 5 பத்துகள் இருக்கு . நமக்கு இப்போ 6 பத்துகள் தான் தேவை, அதனால மேலும் ஒரு 10ஐ கூட்டினால் 6 பத்துகள் கிடைக்கும். அதனால் நம்மோட விடை 666 னு ஆகும். அதாவது 6 நூறுகள் , 6 பத்துகள், மற்றும் 6 ஒன்றுகள் . சரி, இப்போ மீண்டும் ஒரு தடவ 10 ஐ கூட்டலாம் . ஏற்கனவே நம்மகிட்ட 6 பத்துகள் இருக்கு. அது கூட மேலும் ஒரு 10 ஐ கூட்டினால் 7 பத்துகள் தானே ? அப்படின்ன 676 இப்ப நாம மேலும் ஒரு 10 ஐ கூட்டப் போறோம் . இப்போ நமக்கு 6 நூறுகளும் 8 பத்துகளும் 6 ஒன்றுகளும் கிடைக்கும். அதாவது 686 கிடைக்கும் . நாம மறுபடியும் ஒரு 10 ஐ கூட்டலாம் . இங்க ஏற்கனவே 8 பத்துகள் இருக்கு . அது இப்போ 9 பத்துகள் னு மாறும் . அப்போ 696 . அடுத்தது தான் கொஞ்சம் சுவாரசியமா இருக்க போகுது . நா இப்போ இது கூட மேலும் ஒரு 10ஐ கூட்ட போறேன். இப்போ இந்த 10 வது இடத்துல என்ன வரும் . நீங்களே யோசிச்சி சொல்லுக பாக்கலாம் . இங்க, 6 நூறுகள் 9 பத்துகள் என்பதை 69 பத்துகள் அப்படின்னு சொல்லலாம் . அதனால இப்போ, அது கூட மேலும் ஒரு 10 ஐ கூட்டலாம். அப்படி கூட்டினால் 70 பத்துகள் னு ஆய்டும் . அப்போ இங்க 70 பத்துகள்ள், 6 ஒன்றுகள்னு வரும் . அப்போ, இங்க 696 உடன் மேலும் ஒரு 10 ஐ கூட்டினால் நமக்கு 706 னு விடை கிடைக்கும் . இத நாம மறுபடியும் சரி பார்த்தோம் அப்படின்னா 65 பத்துகள், 6 ஒன்றுகள் அப்போ 65 பத்துகள் அப்போ 66 பத்துகள், 67 பத்துகள் , 68 பத்துகள் 69 பத்துகள் , அப்புறம் 70 பத்துகள் . அதுதான் 706 . இனிமேல் உங்களால 10ன் மடங்குகள அழகா எண்ண முடியும் னு நம்புறோம்.