முக்கிய உள்ளடக்கம்
2-ஆம் நிலை
Course: 2-ஆம் நிலை > Unit 2
Lesson 4: 2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்- மறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 1
- மறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 2
- 2-இலக்க எண்களை கூட்டுதல் (மறுகுழுவமைத்தல் இன்றி)
- 2 இலக்க கூட்டல் கணக்குகளை தனிக்கூறுகளாக பிரித்தல்
- 2 இலக்க கூட்டல் கணக்குகளை தனிக்கூறுகளாக பிரித்தல்
- 1-இலக்க எண்ணினை கூட்டுவதற்கு மறுகுழுவமைத்தல்
- பத்துகளின் குழுக்களாக அமைப்பதன் மூலம் கூட்டுதல்
- 1-இலக்க எண்ணினை கூட்டும் போது மறுகுழுவமைத்தல்
© 2023 Khan Academyபயன்பாட்டு விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைCookie Notice
மறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 1
சால் 71 + 24 ஐ கூட்டுகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இனமாற்றம் இன்றி கூட்டல். இந்த படத்த பார்க்கிரிங்க இல்லையா? இந்த கணக்குல நாம, 71யும் 24யும் கூட்ட போறோம். இப்போ இந்த 71அ எப்படி பிரிச்சி சொல்லலாம் அப்படின்னா ? 1வது இட மதிப்பில, எண் 1இருக்கு. அப்படின்னா இது 1வது இடத்துல, 1இருக்கு அப்படின்னு அர்த்தம். அதாவது ஆங்கிலத்தில ONES அப்படின்னு சொல்லுவாங்க. புரிஞ்சிதா ? அடுத்தது, 10வது இட மதிப்புல 7 இருக்கு. அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம்? 7 பத்துகள கொண்டது அப்படின்னு அர்த்தம். இப்ப இந்த 7க்கு மேல TENS அப்படின்னு எழுதிக்கிறேன். அத ஒரு தடவ எண்ணி பார்த்துடலாமா? சரி ஒரு பத்து, 2 பத்து, 3 பத்து, 4 பத்து, 5 பத்து, 6 பத்து, 7 பத்து, ஆக 7 பத்துகள் இருக்கு. பத்துகள் அப்படிங்கறத, TENS அப்படின்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க. அப்போ நம்மகிட்ட, 7 பத்துகள், அப்புறம் ஒரு ஒன்று இருக்குது. அடுத்ததா, இங்க கீழ இருக்குற எண், இந்த எண் வந்து, 24 அப்படின்னு போட்டு இருக்கு. இதுல 10வது இடத்தில, 2 இருக்கு. அப்படின்னா இது ரெண்டு பத்துகள், அதாவது, ஒரு பத்து, ரெண்டு பத்துகள். மேலும் இப்போ ஒன்னாவது இட மதிப்புல, 4 ஒன்றுகள் இருக்கு. அதாவது 4 ONES அதையும் நான் இங்க 4 பக்கத்துல எழுதிடரேன். இப்போ இந்த ரெண்டு எண்களையும் கூட்டும் போது, மொதல்ல ஒன்னாவது இட மதிப்புல உள்ள எண்களை தான் கூட்டனும் . அப்படின்னா 1 கூட்டல், 4 ஒன்றுகள் சேர்ந்தா எவ்வளவு? சுலபமா சொல்லணும்னா, 1 கூட்டல் 4, எவ்வளவு ? சரியா சொன்னிங்க .. 1 கூட்டல் 4, 5 அதாவது இத, 5 ஒன்றுகள் அப்படின்னு சொல்லணும். அடுத்ததா. 10வது இட மதிப்புல உள்ள எண்களை, இப்போ கூட்ட போறோம். அது என்னன்னா, 7 பத்துகள் கூட்டல், 2 பத்துகள். சுலபமா சொல்லணும்னா, 7 கூட்டல் 2 எவ்வளவுன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? ஆம்.. 9 பத்துகள். அப்படின்னா, இட பக்கத்துல, 9 பத்துகளும். வலப்பக்கத்துல 5 ஒன்றுகளும் இருக்கு. இத, நமக்கு புரியும் படியா சுலபமா எப்படி மாற்றி சொல்லலாம் அப்படின்னா, 9 பத்துகளும், 5 ஒன்றுகளும் சேர்த்தா, விடையா நமக்கு 95 கிடைக்கும்.. சரியா.. நாம வேற காணொளில, மறுபடியும் சந்திக்கலாம். அதுவரைக்கும் நீங்க, இந்த மாதிரியான, கூட்டல் கணக்குகள, போட்டு பழகுங்க.