If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: 2-ஆம் நிலை > Unit 2

Lesson 9: 100 - க்குள் வார்த்தைக் கணக்குகள்.

கழித்தல் வார்த்தை கணக்கு: டென்னிஸ் பந்துகள்

100 ஐ விட குறைவான எண்கள் கொண்ட இரண்டு படி கழித்தல் வார்த்தை கணக்கினை சால் தீர்க்கிறார்.

காணொலி எழுத்துப்படி

திருமதி கிரேன்ச் இரண்டாம் நிலை வகுப்புல 45 டென்னிஸ் பந்துகள வைத்திருந்தார்கள். நாம எப்பவுமே இந்த மாதிரி வார்த்தை கணக்குகள செய்யும் போதெல்லாம், நாம அவுங்க கொடுத்திருக்குற தகவல்கள எழுதிக்குறது நல்லது. இப்போ நாம 45 டென்னிஸ் பந்துகள் என்ற நிலைல இருந்து ஆரம்பிக்கலாம், இடைவேளை ல 45 டென்னிஸ் பந்துகள வைத்து விளையாட ஆரம்பிச்சாங்க. அப்பறமா அவுங்க 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளிய போய் விலுந்துட்டதா சொல்றாங்க. அப்புறமா மேலும் 6 டென்னிஸ் பந்துகள், அடிச்ச வேகத்துல காணாமயே போய்டுச்சாம். அப்படின்னா எத்தனை டென்னிஸ் பந்துகள் திருமதி கிரேன்ச் டென்னிஸ் வகுப்புல மிஞ்சி இருக்கும். இப்போ இத எங்கிருந்து ஆரம்பிக்கிறது. சரி, 45 டென்னிஸ் பந்துகளில் இருந்தே ஆரம்பிக்கலாம். நா டென்னிஸ் பந்துகள பெறுரேனா ? இல்ல டென்னிஸ் பந்துகள இழக்குறேனா ? 45 டென்னிஸ் பந்துகள் என்ற நிலைல இருந்து ஆரம்பிக்குறோம். திருமதி கிரேன்ச் ஓட வகுப்பு, 45 டென்னிஸ் பந்துகள் என்ற நிலைல இருந்து தா ஆரம்பிச்சிது அதுக்கப்புறமா 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளில போய் விழுந்துடுச்சி. அப்படினா அவுங்க, டென்னிஸ் பந்துகள இழக்குறாங்கனு அர்த்தம். அதுக்கப்புறமா அவுங்க அடிச்ச வேகத்துல பந்துகள் பறந்து போய் தொலைஞ்சும் போய்டுச்சி மேலும் நா இப்போ சொன்ன 2 செயல்பாடுகள்லயும் அவுங்க டென்னிஸ் பந்துகள இழக்குறாங்க வெளிய விழுந்தாலும் மறைஞ்சி போனாலும், இழப்புதானே, அதனால இப்போ நாம சில பந்துகள இழப்பதால, முதல்ல ஆரம்பித்த பந்துகளல இருந்து நா சில பந்துகள கழிக்க போறேன் நாம ஒன்ன இழந்துட்டா அத கழிக்கதா செய்யனும். மேலும் இந்த கழித்தல பற்றி இன்னொரு குறிப்பு என்ன தெரியுமா ? எத்தனை டென்னிஸ் பந்துகள் திருமதி கிரேன்ச் வகுப்புல மிஞ்சி இருக்குது என்பதுதான். ஆரம்பத்திலிருந்து அதே எண்ணிக்கையிலான பந்துகள் அவுங்ககிட்ட இல்ல போல. அதனால நாம சில பந்துகள கழிக்க வேண்டியிருக்கும். இது கொடுக்கபட்டிருக்க கணக்கிலிருந்தே தெரியுது. 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளிய விழுந்திடுச்சி. அதனால அவைகள அவுங்க இழக்குறாங்க. ஆக நம்மகிட்ட இருந்த மொத்த பந்துகளில் இருந்து இதை நாம கழிக்கனும். அதுக்கப்புறமா 6 டென்னிஸ் பந்துகள் மறைஞ்சி போச்சி. ஆக 19ற்கு மேல இதயும் நாம கழிக்கனும். சரி, இப்போ முதல்ல 19 ஐ கழிக்கலாம். 45 டென்னிஸ் பந்துகள் என்ற நிலைல இருந்து ஆரம்பிக்குறோம். 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளிய போய் விழுந்துடுச்சி. அதனால 19 பந்துகள கழிக்கனும். பந்துகள அவுங்க இழக்குறாங்க. அப்படின்ன இங்க, இந்த முதல் இடத்துல, 5 லிருந்து 9 ஐ கழிக்கனும். 9 ஐ விட 5 சிறிய எண். அதனால நாம மீள் குழுவாக்கம் செய்யனும். அதுக்கு நாம இப்போ 10ம் இடத்துக்கு போவோம். 4 பத்துகளுக்கு பதிலா 3 பத்துகள வச்சி முயற்சி செய்வோம். அப்புறம் அந்த ஒரு 10ஐ எடுத்து இந்த ஒன்றுகளோட சேர்ப்போம். ஆக நம்மகிட்ட இப்போ 10 ஒன்றுகள் இருக்குது. 10 + 5 = 15. இப்போ நாம அத கழிக்கலாம். 15 - 9 = 6 . ஏன்ன 9 + 6 = 15 . இப்போ 3 - 1 = 2 . ஆக இது 26 . என்ன நாம கணக்க முடிச்சிட்டோமா ? இல்ல, இல்ல அவசர படாதீங்க. இந்த எண் 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளிய விழுந்துடுச்சில அத பத்தின கணக்கு. இப்போ மேலும் 6 டென்னிஸ் பந்துகள் மறைஞ்சி போச்சில அதற்கான கணக்க செய்யனும். சரி, 6 டென்னிஸ் பந்துகள் மறைவதற்கு முன்னாடி இருக்கக்கூடிய விடைதா இது ளதாவது 26. இதிலிருந்து இப்போ நாம 6ஐ கழிக்கனும். 45லிருந்து ஆரம்பிச்சோம், 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளிய விழுந்திடுச்சி, இப்போ நம்மகிட்ட இருப்பது 26. இந்த 26லிருந்து 6 பந்துகள் மறைஞ்சி போச்சி. அந்த பந்துகல் மறுபடியும் கிடைக்காது. இப்போ அத கழிப்போம். இப்போ அந்த 6ஐ கழிச்சிட்டா, எவ்வளவு பந்துகள் மீதம் இருக்குனு பாக்க போறோம். 26 - 6 6 - 6 = 0 . அதுக்கப்புறம் 2 பத்துகள். இங்க 2 பத்துகள் மட்டும் தா இருக்கும். அப்படின்னா, திருமதி கிரேன்ச் வகுப்புல எத்தனை டென்னிஸ் பந்துகள் மிஞ்சி இருக்கும்? 20 டென்னிஸ் பந்துகள் தா மிஞ்சி இருக்குது. 45ல் ஆரம்பிச்சோம், 19 டென்னிஸ் பந்துகள் வேலிக்கு வெளிய விழுந்திடுச்சி அத நாம கழிச்சிட்டோம், அப்புறம் 26 தா மீதம் இருந்துச்சி. அதுல 6 டென்னிஸ் பந்துகள் மறைஞ்சி போச்சி.அதனால 6யும் கழிச்சாச்சி. இப்போ நம்மகிட்ட மீதம் இருப்பது 20 டென்னிஸ் பந்துகள் தான். இதையாவது அவுங்க தொலைக்காம வெச்சிகிட்டா சரி.