முக்கிய உள்ளடக்கம்
2-ஆம் நிலை
Course: 2-ஆம் நிலை > Unit 2
Lesson 7: 100க்குள் கூட்டல்மறுகுழுவமைத்தலுடன் கூடிய கூட்டல்
சால் இடமதிப்பினை கருத்தில் கொண்டு 35 + 27 ஐ கூட்டுகிறார்.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
நாம் இப்போது, இரண்டு இலக்க எண்களின், கூட்டல் கணக்கினை பார்க்க போகிறோம். முதல் வருசையில், இரண்டு இலக்கங்கள் கொண்ட எண் இருக்கிறது. அதில் முதலில் இருப்பது, 1 2 3 பத்துகள். அடுத்து, 1 2 3 4 5 ஒன்றுகள் இதனை 3 பத்துகள், 5 ஒன்றுகள் அல்லது 35 என சொல்லலாம். இரண்டாவது வருசையிலும், இரண்டு இலக்கங்கள் கொண்ட எண் இரூக்கிறது. இரண்டு பத்துகளும், 1 2 3 4 5 6 7 ஒன்றுகளும் இருக்கிறது. இதனை 2 பத்துகள், 7 ஒன்றுகள் என்றோ, 27 என்றோ கூறலாம். இப்போது, இந்த இரண்டு எண்களை கூட்ட போகிறோம். அதாவது 35 கூட்டல் 27. அல்லது, இந்த பெட்டிகளை கூட்ட வேண்டும். முதலில் ஒன்று இலக்கத்தை கூட்டுவோம். இங்கே, 5 ஒன்றுகள் இருக்கு. இங்கு, 7 ஒன்றுகள். இந்த 5 ஒன்றுகளை, 7 ஒன்றுகளோடு கூட்டும் பொழுது, எத்தனை ஒன்றுகள் கிடைக்கும் ? அதை நாம் இங்கே வரைகிறேன். மொத்தம், 12 ஒன்றுகள் கிடைக்கும். இங்கே முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். 5உடன், 7ஐ கூட்டி, 12 என, ஓற்றுஇலக்க இடத்தில் போடக்கூடாது. அப்போது என்ன செய்ய வேண்டும்? இதில் உள்ள பத்தினை எடுத்து, பத்தின் இடத்தில் சேர்த்து விடுவோம். அதாவது, இந்த, 1 2 3 4 5 6 7 8 9 10 எடுத்து, இங்கே சேர்த்து விடுவோம். இந்த பட்டையினை எடுத்து, 10இன் இடத்தில் உள்ள பட்டைகளோடு சேர்க்கிறோம். இதை இனமாற்றம் என்போம்,. பெரிதாக ஒன்றும் இல்லை, பத்து ஒன்றுகள் என்பதை, ஒரு பத்து என எழுதுகிறோம். கவனமாக பார்த்தால், ஒன்றின் இடத்தில், இரண்டு ஒன்றுகள் தான் இருக்கிறது. ஆனால் 10இன் இடத்தில், இன்னொரு 10 உள்ளது. 5யும், 7 யும் கூட்டி வரும் 12இல், இரண்டினை மட்டும், ஒன்றின் இடத்தில் எழுதி, ஒன்றை 10இன் இடத்தில் எழுதணும். அதாவது, 5உடன், 7னை கூட்டி வரும் 12ஐ, 1, 2 என எழுதுவோம். இதில் இருக்கிற ஒன்றினை எடுத்து, 10இன் இடத்தில் எழுத போகிறோம். அதனை இங்கே மேலே எழுதணும். மிச்சம் 2, நம்மிடம் உள்ளது. அதனை, ஓற்றுஇலக்க இடத்தில் எழுதுவோம். இப்பொது பத்துகளை கூட்டுவோமா ? ஒரு 10 கூட்டல் 3 பத்துகள். கூட்டல் 2 பத்துகள். மொத்தம் எத்தனை ? உம்.. சரி 6 பத்துகள். அதனை அப்படியே எழுதலாம். 1 2 3 4 5 6 பத்துகள். 35னை, 27உடன் கூட்டினால், நமக்கு 62 கிடைக்கும். அதாவது, 6 பத்துகள், 2 ஒன்றுகள். இவ்வாறு எளிதாக, கூட்டல் கணக்கினை போடலாம்.