If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

இட மதிப்பின் உதாரணம்: 42

42 என்ற எண்ணை 4 பத்துகள் மற்றும் 2 ஒன்றுகளாக சால் காட்டுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இந்த காணொளியில், நாம் செய்யப்போவது, தொகுதிகளாக பிரிப்பது. இங்குள்ள மரகத பச்சை நிற பட்டைகள் ஒவ்வொன்றும், எண் ஒன்றை குறிப்பதாகும். இந்த பட்டைகளை நமக்கு வசதியான, இலக்கங்களில் பகுதிகளாக பிரிக்க போறோம் இலக்கங்கள். பூஜியம், 1 2 3 4 5 6 7 8 9 இதை இரண்டு இலக்க தொகுதிகளாக, அதாவது, 10 எண்ணிக்கை கொண்ட, குழுக்களாகப் பிரிக்க போகிறோம். முதலில் எத்தனை பத்துக்கள் உள்ளன என்பதை பார்ப்போம். அதன் பிறகு, மிக முக்கியமாக, மீதம் உள்ள எண்கள் எத்தனை என்பதை பார்க்கலாம். இதை 10இன் குழுக்களாக ஒருங்கிணைப்போம். 1 2 3 4 5 6 7 8 9 10 இங்கு இருப்பது ஒரு பத்தின் தொகுதி, இந்த தொகுதியை, கட்டமிட்டு வைத்துக்கொள்வோம். இது இன்னொரு பத்தின் தொகுதி. மேலும் சில குழுக்களை சேர்ப்போம். 1 2 3 4 5 6 7 8 9 10 இது முன்றாம் குழு. மேலும் ஒரு குழுவின் அளவிற்கு எண்ணிக்கை இருக்கலாம். இது முன்றாம் குழு. இதன் பிறகு, 1 2 3 4 5 6 7 8 9 10 இது என்னுடைய நான்காம் குழு. நான்காம் குழு இங்கு இருக்கிறது. என்னால் இதை, குழுக்களாக சேர்க்க முடிந்தது. இது ஒரு 10, இது மீண்டும் ஒரு 10, இது முன்றாவது 10, மற்றும் இது நான்காவது. நாம் இதை, 10 கூட்டல் 10 கூட்டல் 10 கூட்டல் 10 என்று அழைக்கலாம். அல்லது இதன் மொத்த கூட்டு, நாற்பதிற்கு சமம். 1 2 3 4 பத்துகள். ஆனால், எண்கள் முடியவில்லை. இன்னும், 1 2 இரண்டு எண்கள் மீதம் உள்ளன இது ஒன்று, இங்கு இருப்பது, இது மற்றொன்று. நம்மிடம் இரண்டு எண்கள் உள்ளன. அது 2 ஒன்றுகள். நினைவில் கொள்ளுங்கள். சிறிய பச்சை பட்டைகள் ஒன்றை குறிக்கின்றன. அப்படி என்றால், அதன் முழு எண் என்ன ? அது என்னவென்றால், இந்த 4 பத்துகள், 1 2 3 4 பிறகு, இரண்டு ஒன்றுகள். குறித்து கொள்வோம். நான்கு பத்துகள், இரண்டு ஒன்றுகள். என்ன இது? நாம் எண் முறையை பயன்படுத்தினால், தொடர்ந்து அது முறையை பின்பற்றலாம். நமக்கு இங்கே, பயன்பட்டு இருப்பது, எண் அமைப்பு. அதையே இங்கு பின்பற்றுவோம். இந்த முதல் இடம், ஒன்றிற்கான இடம். இதற்கு நாம், நீல வண்ணத்தை பயன்படுத்துவோம். ஆக இதை ஒன்றின் இடமாக வைத்துக்கொள்கிறோம். நம்மிடம் இரண்டு ஒன்றுகள் உள்ளன. இதன் இடப்பக்கம் இருக்கும் இடத்தில், எத்தனை பத்துகள் இருக்கிறது? அதையும் இங்கே குறித்துக்கொள்வோம். நம்மிடம் இருப்பது எத்தனை பத்துகள் ? 4 பத்துகள். எண்களின் அமைப்பில் இதை எப்படி சொல்வது. இது 4 பத்துகள், மற்றும் 2 ஒன்றுகள். இதை 42 என்று கூறலாம். இதை வேறு வழியாக யோசிக்கலாமா ? அதாவது இது, 10 கூட்டல் 10 கூட்டல் 10 கூட்டல் 10 . அதன் கூட்டு 40 ஆகும். மீண்டும் எண்களின் அமைப்பில் எடுத்துரைத்தால், 2 ஒன்றுகள் இருக்கின்றன. நினைவில் கொள்ளுங்கள், இந்த 4 ஆனது, 40 என்ற பொருளில், 4 பத்துகளை குறிக்கிறது. 4 பத்துகள், 40 தானே?