If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

0 முதல் 120க்குள் விடுபட்ட எண்கள்

சால் 0 முதல் 120 வரையில் உள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்களை கண்டுப்பிடிக்கிறார்.

காணொலி எழுத்துப்படி

இங்க இருக்குற, இந்த எண் வருசையில, எந்த எண் விடுபட்டு இருக்கு ? 100 101 102 103 104 105 அப்பறம், ஆம்.. 106தான் விடுபட்டு இருக்கு இப்போ மத்ததையும் எண்ணலாம். 107, 108, 109, 110 அப்போ, 106 தான் விடுபட்டு இருக்கு. இல்லையா ? ஏன்னா ? 106தான் 105க்கும், 107க்கும் இடையில இருக்ககூடிய எண். இப்போ இந்த இடத்தில, எந்த எண் விடுபட்டு இருக்குன்னு பார்க்கலாம் !! இத கண்டுபுடிக்க, மொதல்ல 100 இருந்து ஆரம்பிக்கலாம். 100க்கு அடுத்த எண் என்ன ? இம்.. சரியா சொன்னிங்க.. 101 தான் இல்லையா ? அதே போல, 102, 103, 104ன்னு எண்ணிகிட்டே போகலாம். இது சுலபமா இருக்கு இல்ல? சரி அடுத்த கனக்க பார்க்கலாம். 105க்கு முன்னாடி வரக்கூடிய முழு எண் என்ன ? அதாவது, 5க்கு முன்னாடி வரக்கூடிய முழு எண்.. யோசிக்கவே வேணாம், 4தான் இல்லையா ? அதே மாதிரி, 105க்கு முன்னாடி வரக்கூடிய முழு எண் 104. சரியான விடை. இப்போ இங்க இருக்குற அட்டவணையில விடுபட்ட எண்கள கண்டுபிடிக்க போறோம். அதாவது 1 2 3 அப்படியே, 10 வரைக்கும். அதே மாதிரி, 11ல இருந்து, 20 வரைக்கும், அதே மாதிரி, 120 வரைக்கும் கொடுத்து இருக்காங்க . இதுல, ஒரே ஒரு கட்டம் மட்டும் காலியா இருக்கு பார்த்திங்களா ? அம்த எண் என்னன்னு கண்டுபுடிக்கணும். அது 118ட விட பெரிய எண்ணாவும், அதே நேரம் 120த விட சின்ன எண்ணாவும் இருக்கனும். அதுக்கு நாம இப்போ 111ல இருந்து எண்ணலாம். 111, 112, 113, 114, 115, 116, 117, 118 119 அப்பறமா, 120 20 முன்னாடி 19தான் வரும் இல்லையா ? அதே மாதிரி, 120 முன்னாடி 119தான.. அப்பறமா, 18 அப்பறமா, 19 வரும். அதே மாதிரி, 118 அப்பறமா 119 தான். சரியான விடை. நம்மளோட விடையை சரிபார்க்க நாம இன்னொரு எடுத்துக்காட்ட பார்த்துடலாம். இங்க என்ன எண் விடுபட்டு இருக்கு ? இங்க 7இக்கு அடுத்ததா வரக்கூடிய எண் என்ன ? 8 தான ? அதே போல, 107க்கு அடுத்ததா வரக்கூடிய எண் வந்து 108தான். அப்பறம் 109, 110ன்னு எண்ணிக்கிட்டே போகலாம். இந்த காணொளில நாம, எண்கல ரொம்ப சுவாரஸ்யமான முறையில கத்துகிட்டோம் இல்ல ?