If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

14 - 6 ஐ கழித்தல்

சால் 14-6 ஐ கழிப்பது எப்படி என்பதற்கு முதலில் 2 மற்றும் 4 ஐ கழிப்பதில் இருந்து சிந்திக்கிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

நாம் இந்தக் காணொளியில் மிக எளிமையான கழித்தல் கணக்குகளை செய்து பார்க்கப்போகிறோம். 14 கழித்தல் 2 ஐ கணக்கிடுவோம் பிறகு 14 கழித்தல் 4 மற்றும் 14 கழித்தல் 6 ஐ யும் கணக்கிடுவோம் காணொளியை நிறுத்தி விட்டு நீங்கலே இந்த கணக்குகளை செய்து பார்க்க முயற்சி செய்யுங்கள் மிகவும் எளிமையான கணக்குகள் தான் சரி இப்போது நாம் கணக்கை பார்ப்போம் எண் 14 இங்கே உள்ளது இந்த ஒன்றின் பொருள் 1 பத்து அதோடு 4 ஒன்றுகள் இங்கே மொத்தம் 14 பொருட்கள் உள்ளன 1 2 3 4 5 6 7 8 9 10 இது ஒரு பத்து பத்து கொண்ட ஒரு குழு அதை சுற்றி ஒரு கட்டம் போடுவோம் பிறகு எத்தனை ஒன்றுகள் உள்ளன 1 2 3 4 ஒன்றுகள் ஆக இது 14 இது ஒரு பத்து பிறகு 4 ஒன்றுகள் ஆக இது 14 அடுத்தது 14 கழித்தல் 2 என்ன இதிலிருந்கு 2 ஐ எடுத்துவிடுவோம் 1 2 மீதம் எத்தனை இந்த ஒரு பத்து அப்படியே உள்ளது எத்தனை ஒன்றுகள் உள்ளன 2 ஒன்றுகள் மீதம் உள்ளன 1 2 ஆகவே விடை 12 அதற்கு அடுத்து 14 கழித்தல் 4 என்ன இப்பொழுது 4 ஐ நீக்குவோம் 1 2 3 4 அனைத்து ஒன்றுகளும் நீக்கப்பட்டுவிட்டன மீதம் என்ன ஒரு பத்து இன்னும் உள்ளது பூஜ்ஜியம் ஒன்றுகள் உள்ளது அதாவது ஒன்றுகலே இல்லை பூஜ்ஜியம் ஒன்றுகள் ஆக 14 கழித்தல் 4 சமம் 10 14 என்பது 10 கூட்டல் 4 அதில் நாம் 4 ஐ கழித்து விட்டோம் மீதம் 10 அதாவது 14 சமம் 10 கூட்டல் 4 அதில் 4 ஐ கழிக்கிறோம் ஆக 10 கூட்டல் 4 கழித்தல் 4 இப்பொழுது 4 கழித்தல் 4 சமம் பூஜ்ஜியம் ஆகிவிடும் 10 கூட்டல் பூஜ்ஜியம் சமம் 10 தான் அதையே இங்கும் செய்யலாம் 14 என்பது 10 கூட்டல் 4 இதில் 2 ஐ கழித்தோம் விடை 10 கூட்டல் 4 கழித்தல் 2 அப்போது 4 கழித்தல் 2 சமம் 2 விடை அப்பொழுது 12 இதனை எளிமைப்படுத்தினால் 2 வரும் இந்த 2 இங்கே உள்ளது அதே போல இதனை எளிமைப்படுத்தினால் சுழியெண் வரும் அந்த சுழியெண் இங்கே உள்ளது நிறைவாக 14 கழித்தல் 6 என்ன 1 2 3 4 5 6 ஐ நீக்குவோம் நாம் பத்தின் குழுவில் நுழைந்து விட்டோம் விடை இப்பொழுது ஓரிலக்க எண்ணாக இருக்கும் மீதி 1 2 3 4 5 6 7 8 விடை 8 இந்த கணக்குகள் அடிப்படையான கழித்தல் கணக்குகள் தான் மீகவும் சுலபமானது கூட்டல் கழித்தல் கணக்குகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை எனவே கவனத்துடன் போட்டு பழகுங்கள்