If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

Course: முதல் நிலை > Unit 2

Lesson 9: 2 இலக்க எண்களுக்குள் கூட்டல் அறிமுகம்

மறுகுழுவமைத்தல் அல்லாமல் இரண்டு இலக்க எண்களை கூட்டுதல் 1

சால் 71 + 24 ஐ கூட்டுகிறார்.

காணொலி எழுத்துப்படி

இனமாற்றம் இன்றி கூட்டல். இந்த படத்த பார்க்கிரிங்க இல்லையா? இந்த கணக்குல நாம, 71யும் 24யும் கூட்ட போறோம். இப்போ இந்த 71அ எப்படி பிரிச்சி சொல்லலாம் அப்படின்னா ? 1வது இட மதிப்பில, எண் 1இருக்கு. அப்படின்னா இது 1வது இடத்துல, 1இருக்கு அப்படின்னு அர்த்தம். அதாவது ஆங்கிலத்தில ONES அப்படின்னு சொல்லுவாங்க. புரிஞ்சிதா ? அடுத்தது, 10வது இட மதிப்புல 7 இருக்கு. அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம்? 7 பத்துகள கொண்டது அப்படின்னு அர்த்தம். இப்ப இந்த 7க்கு மேல TENS அப்படின்னு எழுதிக்கிறேன். அத ஒரு தடவ எண்ணி பார்த்துடலாமா? சரி ஒரு பத்து, 2 பத்து, 3 பத்து, 4 பத்து, 5 பத்து, 6 பத்து, 7 பத்து, ஆக 7 பத்துகள் இருக்கு. பத்துகள் அப்படிங்கறத, TENS அப்படின்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க. அப்போ நம்மகிட்ட, 7 பத்துகள், அப்புறம் ஒரு ஒன்று இருக்குது. அடுத்ததா, இங்க கீழ இருக்குற எண், இந்த எண் வந்து, 24 அப்படின்னு போட்டு இருக்கு. இதுல 10வது இடத்தில, 2 இருக்கு. அப்படின்னா இது ரெண்டு பத்துகள், அதாவது, ஒரு பத்து, ரெண்டு பத்துகள். மேலும் இப்போ ஒன்னாவது இட மதிப்புல, 4 ஒன்றுகள் இருக்கு. அதாவது 4 ONES அதையும் நான் இங்க 4 பக்கத்துல எழுதிடரேன். இப்போ இந்த ரெண்டு எண்களையும் கூட்டும் போது, மொதல்ல ஒன்னாவது இட மதிப்புல உள்ள எண்களை தான் கூட்டனும் . அப்படின்னா 1 கூட்டல், 4 ஒன்றுகள் சேர்ந்தா எவ்வளவு? சுலபமா சொல்லணும்னா, 1 கூட்டல் 4, எவ்வளவு ? சரியா சொன்னிங்க .. 1 கூட்டல் 4, 5 அதாவது இத, 5 ஒன்றுகள் அப்படின்னு சொல்லணும். அடுத்ததா. 10வது இட மதிப்புல உள்ள எண்களை, இப்போ கூட்ட போறோம். அது என்னன்னா, 7 பத்துகள் கூட்டல், 2 பத்துகள். சுலபமா சொல்லணும்னா, 7 கூட்டல் 2 எவ்வளவுன்னு சொல்லுங்க பார்க்கலாம் ? ஆம்.. 9 பத்துகள். அப்படின்னா, இட பக்கத்துல, 9 பத்துகளும். வலப்பக்கத்துல 5 ஒன்றுகளும் இருக்கு. இத, நமக்கு புரியும் படியா சுலபமா எப்படி மாற்றி சொல்லலாம் அப்படின்னா, 9 பத்துகளும், 5 ஒன்றுகளும் சேர்த்தா, விடையா நமக்கு 95 கிடைக்கும்.. சரியா.. நாம வேற காணொளில, மறுபடியும் சந்திக்கலாம். அதுவரைக்கும் நீங்க, இந்த மாதிரியான, கூட்டல் கணக்குகள, போட்டு பழகுங்க.