முக்கிய உள்ளடக்கம்
அடிப்படை வடிவியல்
Course: அடிப்படை வடிவியல் > Unit 1
Lesson 2: இணை கோடுகள் & செங்குத்து கோடுகள்இணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள் அறிமுகம்
இணைக் கோடுகள் எப்போதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது, மற்றும் செங்குத்துக் கோடுகள் ஒன்றையொன்று 90 டிகிரி கோணத்தில் வெட்டிக்கொள்ளும். இணை மற்றும் செங்குத்துக் கோடுகளை எவ்வாறு அடையாளம் காண்பது என அறிக. சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.
Want to join the conversation?
No posts yet.
காணொலி எழுத்துப்படி
இரு வடிவியல் கணக்கபத்தி பாக்கப்போறோம். முதலாவது வடிவங்கள் செங்குத்தா இருப்பது அடுத்த கருத்து வடிவங்கள் இணையா இருப்பது இரண்டு கோடுகள் செங்குத்தா இருந்தா.. அவை செங்கோணத்தில் சந்திக்குது அப்படின்னா என்ன..? இது ஒரு கோடு இது இன்னொரு கோடு இந்த இரண்டும் செங்கோணத்துல சேர்ந்தா இத செங்குத்து கோடுகள்னு சொல்லுறோம் இந்த இரண்டும் நிச்சயமா சந்திக்குது இல்லையா ஆனா இந்த இரண்டும் செங்கோணத்துல சந்திக்குரதுக்கு இந்த இரண்டு கோட்டுக்கும் நடுவுல உருவாகும் கோணங்கள் 90 பாகைகளுக்கு சமம்மா இருக்கணும்.. பாகை அப்படிங்குறது degree அப்படின்னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க அத நீங்க மறந்துடாதீங்க ஒரு கோணம் கூட 90 பாகைகளுக்கு சமம்மா இல்லனா.. மத்தக்கோணங்களும் 90 பாகைக்கு சமம்மா இருக்கமுடியாது. அது எல்லாமே 90 பாகைகளுக்கு சமம்மா இருந்தா இந்தக்கோடுகள் செங்குத்துக்கோடுகள்.. அதாவது perpendicular lines-னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க நம்மக்கிட்ட எப்போதுமே ஒன்னோட ஒன்னு சந்திக்காத இரண்டு கோடுகள் இருந்தா அதாவது இடண்டும் எப்போதும் ஒரே நீல அளவுல பிரிஞ்சிருந்தா அத இடண்டையுமே இணைக்கோடுகள் அப்படின்னு சொல்லுவாங்க.. இணைக்கோடுகள் அப்படிங்குரதுக்கு ஆங்கிலத்துல parallel lines அப்படின்னு சொல்லுவாங்க இந்தக்கோடும் அப்புறம் இந்தக்கோடும் இணைக்கோடுகள் தான். இந்த இரண்டும் சேரவே போறதில்ல... இரண்டுமே ஒரே திசைலதான் போகுது. இரண்டும் ஒரே கோடு மாதிரி ஒரு கோடும் மற்றொரு கோடும் சரியான இடைவெளி விட்டு நகர்ந்துபோகுது. இந்த இரண்டு கோடுகளும் எப்போதுமே சந்திக்கவே போறதில்லை அதனால தான் இது இரண்டும் இணைக்கோடுகள் அதாவது ஆங்கிலத்துல parallel lines அப்படின்னு சொல்லுவாங்க இப்போ நாம வரைந்த இதக்கோடு சந்திக்குது ஆனா செங்கோணத்துல சந்திக்கல. இந்தக்கோடும்... இந்தக்கோடும்... செங்கோணத்துல சந்திக்கல அதனால இந்த இரண்டு கோடுகளும் சந்திக்கமட்டுமே செய்யிது.