If you're seeing this message, it means we're having trouble loading external resources on our website.

நீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.

முக்கிய உள்ளடக்கம்

இணை கோட்டுத்துண்டுகளை வரைதல்

சல் அவர்கள் கொடுக்கப்பட்ட புள்ளிகளை கொண்டு இணைக் கோட்டுத்துண்டுகளை வரைகிறார். சால் கான் -ஆல் உருவாக்கப்பட்டது.

காணொலி எழுத்துப்படி

இந்த காணொளில, இந்த முதல் வாக்கியம் என்ன சொல்லுது அப்படின்னா? எந்த ரெண்டு புள்ளிகளையும், ஒரு கோட்டு துண்டால இணைக்க முடியும் . ஆமாம், இந்த கூற்று சரியானது தான். இப்ப இந்த ரெண்டு ஜோடி கருப்பு புள்ளிகள இணைச்சு, ரெண்டு இணை கோட்டு துண்டுகள உருவாக்க முடியும். இப்போ இந்த புள்ளியையும். அப்பறமா, இந்த புள்ளியையும் இணைச்சி, என்னால ஒரு கோட்டுத்துண்ட உருவாக்க முடியும். அதுக்கு அப்புறமா, இன்னொரு கோட்டு துண்டு இதோ இந்த புள்ளியையும், அப்புறமா, இந்த புள்ளியையும், இணைச்சு உருவாக்கலாம். இந்த இணை கோடு ரொம்ப நேர்த்தியா இருக்கு இல்லை ? இது ரொம்ப சரியானதாவும் இருக்கனும். சரி, இதையே இன்னொரு வழயில் முயற்சிக்கலாமா ? இப்ப இந்த புள்ளியல இருந்து, இதோ இந்த புள்ளிக்கும், அப்புறமா, இந்த புள்ளியல இருந்து, இந்த புள்ளிக்கும் வரைஞ்சா, அது இணையா இருக்காது. இது இப்படியே தொடர்ந்துகிட்டே போனா இந்த ரெண்டு கோடுகளும், எதாவது ஒரு இடத்தில, வெட்டிக்கொள்ளும். அப்படி பார்த்தா, நாம மொதல்ல செய்ததுதான் சரியான விடை. அப்போ இவை கோட்டுத்துண்டுகள் ஆகும். ஏன் தெரியுமா ? இவை முடிவு புள்ளிகள பெற்று இருக்கு. இது கோட்டுத்துண்டுகளா இருக்கறதனால, எந்த திசையிலுமே தொடராது. இது ஒரு கதிரா இருக்கும் அப்படிங்கிற பட்சத்துல, ஒரு கூறிப்பிட்ட திசையில மட்டும் தான் தொடரும். ஒரு வேளை இது கோடா இருக்கும் அப்படின்னா, ரெண்டு புள்ளிகள் வழியாவும் தொடரும். அப்போ இதுக்கு முடிவு புள்ளிகள் அப்படின்னு ஒன்னு கிடையாது. அதனால தான் இந்த ரெண்டு புள்ளிகளும் தொடர்ந்துகிட்டே இருக்கு. சரி, இதே மாதிரி இன்னொரு கணக்கையும் செய்யலாம். இப்போ இந்த கதிர நகர்த்தும் போது, அது A அப்படிங்கிற முற்று புள்ளிய பெருது. மேலும் அது இன்னொரு கருப்பு புள்ளி வழியா செல்லுது. இப்போ இந்த கதிரானது, இந்த இளம் சிவப்பு கோட்டுக்கு இணையாவும் இருக்கனும். அதுக்கு எனக்கு 2 வாய்ப்புகள் இருக்கு. இப்போ இந்த கருப்பு புள்ளிய இணைக்கும்போது, அது.. உம்.. இணையா இல்லை. அது செங்குத்தா அமையுது. அதனால இதோ இந்த புள்ளிய இணைக்கலாம். ஆம்.. இப்போ பாருங்க. இந்த கதிர், இந்த இளம் சிவப்பு கோட்டுக்கு இணையா அமைந்து இருக்கு. மேலும் இது ஒரு முற்று புள்ளிய கொண்டு இருக்கரதனால், இது கதிரா அமையுது. இது A அப்படிங்கிற முற்று புள்ளி, ஒரு திசைய நோக்கி தொடருது. மேலும் இது எப்போதுமே, ஒரு திசையில தொடரும் அப்படிங்கரத, இது முலியமா நாம தெரிந்சுக்கலாம்.